Avvaiyar Works for Children |
Avvaiyar Works are presented under 18 sections listed below. Click at section name, to go to any section.
|
The name Avvaiyar (ஔவையார்) means a 'respectable good woman', which can be a generic title to few great personalities. She was a Tamil poet widely known for her works written for young children, such as: Aathichoodi; Kondrai Vendhan; Nalvazhi; and Moodhurai. She is often portrayed as an old and intelligent lady by Tamil people. பண்டைய தமிழின் மிகச் சிறந்த பெண் கவிஞர்களில் ஒருவர். அவ்வையார், கவிதாயினி, துறவி, சித்தர், கதை சொல்பவர், சமூக சீர்திருத்தவாதி எனப் பலர் இருக்கலாம். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும். |
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை | ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
திருவாத்தி பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய தேவனை (விநாயகக் கடவுளை )
வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை | என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
Let us pray daily, at the feet of the Son of Lord Siva
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா -Nalvazhi
Milk, clear honey, caramel and lentil I offer you the four mixed - beautiful Teacher with the precious gem (Elephant) face, Teach me Sangam Tamil in its triple form.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு -Moodhurai
பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்
Those who worship with flowers at the feet of the one with a beautiful body and a trunk will have the gift of the tongue, an alert mind, the grace of the Goddess of wealth and a healthy life.
Aathisoodi-30.அறனை மறவேல்.
கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்
Do not forget God or almighty
Aathisoodi-57. திருமாலுக்கு அடிமை செய்
திருமாலுக்கு/நாராயணர்க்கு தொண்டு செய்
Serve Tirumal or Vishnu or God or Almighty
Aathisoodi-61. தெய்வ மிகழேல்
கடவுளை பழிக்காதே.
Do not disregard the supreme divine, God etc (include nature worship)
Aathisoodi-102. வீடு பெறநில்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
Progress for salvation, by leading a peaceful spiritual life
KondraiVendhan-2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
It is good to visit the temple for worship. Praying at temple is a good habit
KondraiVendhan-43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்
தெய்வம் கோபித்துக் கொண்டால், எல்லாம் அழிந்து போகும். கடவுளின் கோபம் ஒருவரின் செல்வம் மற்றும் அனைத்தையும் பறித்துவிடும்.
God’s wrath will take away one’s fortunes, wealth and all. Loose everything, acquired or saved.
KondraiVendhan-51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்
Live in places with good water resources or water is available.
KondraiVendhan-71. மாரி அல்லது காரியம் இல்லை
மழையின்றி ஒன்றும் இல்லை
With out rain nothing will happen on this earth (no life, food etc).
KondraiVendhan-72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
The more there is lightening, the more will it rain. Lightening is followed by thunder and rain. May refer to signs before, a major event will occur.
KondraiVendhan-82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்
If rain fails, there will be less food production and charity will reduce.
KondraiVendhan-89. வைகல் தோறும் தெய்வம் தொழு
தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு
Prey to God every morning. Make that a habit.
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும் -Nalvazhi-15
சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்
There is no danger in life for those who pray With the word ‘Sivayanama’ in their heart This is the only wise course of action Everything else will leave one to his fate.
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். -Nalvazhi-38
நல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது.
God residing inside all beings make everthing to move. To search for the good, the bad, the self, the other, The negative or the positive is all foolishness. If one does not realize that within them lies the answer. Then searching outside oneself is a waste of time.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். -Nalvazhi-40
தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும், நான்கு வேதத்தின் முடிவும், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும், மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும், திருமூலர் பாடிய திருமந்திரம் ஆகிய நூல்கள் சொல்லும் பொருள்கள் அனைத்தும் ஒன்று தான் என்று நீ உணர்ந்து கொள்.
The Sacred kural of Thiruvalluvar, the four Vedhas, the sacred hymns of three nayanmars, the works of Manicavasagar, the words of Thirumoolar all speak of one thing, the philosophy of the same faith.
Aathisoodi-7. எண் எழுத்து இகழேல்
கணித, இலக்கண, அற நூல்களை கற்காமல் விட்டு விடாதே.
Do not underestimate the power of learning maths, language, and moral texts
Aathisoodi-11. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
Never stop learning
Aathisoodi-29.இளமையில் கல்.
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
Learn when you are young. Donot waste youth in other activities, when it it is the best time for acquiring knowledge/education.
Aathisoodi-39. கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
Listen to good and valuable advice
Aathisoodi-40. கைவினை கரவேல்
உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
Do not hide knowledge about handicrafts
Aathisoodi-45. சான்றோ ரினத்திரு
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
Associate with scholars / wise people
Aathisoodi-71. நூல்பல கல்
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
Have desire to learn more.
Aathisoodi-84. பேதைமை யகற்று
அறியாமையைப் போக்கு
Eliminate ignorance. Try to understand, rather than remaining ignorant of things around or what is happening around.
Aathisoodi-95. மேன்மக்கள் சொற்கேள்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
Listen to the words of wise and scholarly people
Aathisoodi-101. வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
Show interest and learn good skills
KondraiVendhan-7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
Numbers and letterss are as worthy as the two eyes.
KondraiVendhan-22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
Education is the real wealth than the one in your hands.
KondraiVendhan-48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்
முரண்பட்ட கருத்துக்கள் அல்லது கருத்துக்கள் துன்பத்தை மட்டுமே ஏற்படுத்தும்
Conflicting views or opinions can only cause distress
KondraiVendhan-53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்
Learn good values from good books and then follow accordingly
KondraiVendhan-75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது
Words of wise men are like ambrosia, bringing great benefits.
KondraiVendhan-91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்
படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.
The illiterates are bereft of good character and good behaviour.
பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு -Nalvazhi-35
பூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன் , குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.
There are trees that bear fruit without flowering. Likewise there are men who help without asking. There are seeds that do not grow even when sowed Like the fools who do not heed even when told.
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு -Nalvazhi-39
ஒருவன் எத்தனை தான் கல்வி கற்றாலும், அவனது முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும் மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன் படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பு இருப்பது போல், அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன் படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை.
If one does not give up anger, jealousy and lust and directs his thoughts towards God before he is thirty Then he will have nothing but his knowledge to indicate his learning, like an old woman who has only her breasts to indicate her womanhood.
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் -Moodhurai-7
அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின் அளவே.
The lily rises to the level of water it floats in
One’s knowledge is based on the books he reads
One’s wealth depends on his previous birth’s merits
One’s character depends on the class he belongs to
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம் -Moodhurai-13
கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்
The large trees of the forest are not the real trees.
But those who stand in front of a gathering
Unable to read and unable to heed
Are the ones who are the real trees
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி -Moodhurai-14
காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன் சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை. விஷயமும் இல்லை.
An illiterate person writing a poem
Pretending to be a learned bard, is
Like a turkey that pretends to be a peacock
Spreading its ugly wings and trying to dance
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு -Moodhurai-26
ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.
If the merits of a king is weighed against a learned man
The learned man will triumph over the king, for
The king is held in esteem only in his own country, but
The learned are held in high esteem wherever they go
Aathisoodi-1.அறஞ் செய விரும்பு
நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும்.
Have desire to do good deeds
Aathisoodi-10. ஒப்புரவு ஒழுகு
Act with high moral standards
Aathisoodi-13. அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
Do not be cheat, make excessive profits (exploit) in selling food grains
Aathisoodi-4.கண்டொன்று சொல்லேல்.
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
Tell exactly what you saw
Aathisoodi-23.மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே. லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே
Do not grab other’s land for your needs
Aathisoodi-24.இயல்பு அலாதன செய்யேல்.
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
Do not involve yourself in bad deeds
Aathisoodi-27.வஞ்சகம் பேசேல்.
(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
Do not utter mean / cunning words
Aathisoodi-28.அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களை செய்யாதே
Never do unpleasant and bad things
Aathisoodi-33. காப்பது விரதம்
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
Keep up your vows, promises and commitments.
Aathisoodi-38. கெடுப்ப தொழி
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
Do not involve in actions that creates trouble for others
Aathisoodi-41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
Do not rob or steal. No desire for others'items or possessions.
Aathisoodi-46. சித்திரம் பேசேல்
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
Do not speak lie as truth
Aathisoodi-55. தக்கோ னெனத்திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
Let others feel you are trustworthy and good
Aathisoodi-58. தீவினை யகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
Don’t commit sins
Aathisoodi-66. நன்மை கடைப்பிடி
நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
Stick / Continue doing good deeds
Aathisoodi-73. நேர்பட வொழுகு
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
Be honest and truthful (straight forward)
Aathisoodi-103. உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
Lead your life with exceptionally good qualities
Aathisoodi-106. வேண்டி வினைசெயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
Do not purposely commit sins / bad deeds
Aathisoodi-109. ஓரஞ் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
Do not give a biased opinion / judgement
KondraiVendhan-11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
For priests morality is more important than chanting vedic scriptures.
KondraiVendhan-50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
சொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு
Learned men keep up their words or do not deviate from their words.
KondraiVendhan-54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
Betrayal cannot be hidden from your conscience. Donot cheat your conscience.
KondraiVendhan-63. புலையும் கொலையும் களவும் தவிர்
புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே
Avoid murder, robbery and eating flesh
KondraiVendhan-64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது
People of low moral character do not behave well.
KondraiVendhan-68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு
Avoid everything that is bad or that causes misery
KondraiVendhan-74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
Every action in the morning bears fruit in the evening.
KondraiVendhan-87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை
A man of pure heart does not harbour destructive or evil ideas/motives.
புண்ணியமாம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல் -Nalvazhi-1
மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்
The merits and sins committed in past life are all that are left to those born on this earth! This is what every religion says and nothing else It is best to avoid evil and do deeds of merit.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி -Nalvazhi-2
உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.
There are only two classes or castes of people on this earth based on the principle of natural justice. In life, contributors or helpful are superior, non-contributors or problem creators are inferior, as per great books.
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான் -Nalvazhi-21
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.
To those who do not lead a life of deceit the Goddess of wealth, sitting on the red lotus will give water, a place to rest, productive land, Food, fame, fortune and a long healthy life.
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை -Nalvazhi-23
வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.
In the house of those who bear false witness Demons, and snakes will take residence, Poisonous weeds and creepers will take hold Illness and bad luck will take over.
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி -Nalvazhi-37
பாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களை போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. அதை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.
To overcome the effects of the sins of our previous births There are no advice in all the Vedhic treaties of this world. So to protect you from the effects of past sins Follow a virtuous life that leads you to redemption.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. -Moodhurai-10
உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்
The water poured to irrigate the paddy runs along the canal
and benefits the grass that grows along the bund.
If there is a good man living in this world
It will rain on his behalf to benefit all
மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும் -Moodhurai-12
தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம் தருவதில்லை. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல வாசனையைத் தருகிறது. பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது. எனவே உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது.
The screwpine leaf is large but it is the pollen that smells sweet.
So, do not judge one’s ability based on his size.
For the sea is vast but its water is of little use
While water from a small spring near can save one’s life
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால் -Moodhurai-18
தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன் சிதறலும் தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்? அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும்.
When hit by hard times, honest men will not change
What happens to those who are not the same?
When a golden pot is broken it still keeps its value
What happens to its value when an earthen pot breaks?
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான் -Moodhurai-6
தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.
Those who by nature would rather die if necessary,
Would they ever be servile to their enemies?
A load-bearing stone when piled with extra-weight
Will shatter into pieces than bend or buckle.
Aathisoodi-21.நன்றி மறவேல்.
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
Do not forget timely help offered / gratitude
KondraiVendhan-18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்
Finding fault results in loss of relationships.
KondraiVendhan-20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்
Abandon your actions, if it causes harm
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். -Moodhurai-1
ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.
Once the help is rendered to the needy
Do not wait for any return of gratitude, for
The coconut palm that takes water in its roots
Delivers it later as sweet juice at its top
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். -Moodhurai-30
தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.
The tree gives its shade until the end,
even to those who chop it down,
Similarly, the men of wisdom will protect
even those who had caused them distress
Aathisoodi-17.ஞயம்பட உரை.
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
Speak nice and sweet
Aathisoodi-48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
Do not use hurting words. Never hurt others with your speech.
Aathisoodi-53. சொற்சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
Do not use wrong or bad words in your conversation
Aathisoodi-75. நொய்ய வுரையேல்
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
Do not speak abusive language
Aathisoodi-77. பழிப்பன பகரேல்
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
Do not use vulgar language
Aathisoodi-79. பிழைபடச் சொல்லேல்
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
Speak clear with no mistakes. Speech should not create wrong opinion or lead to mistakes.
Aathisoodi-90. மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
Do not exaggerate or build up things
Aathisoodi-97. மொழிவ தறமொழி
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
Utter words with great clarity. say clearly with right words at right place and time.
Aathisoodi-105. வெட்டெனப் பேசேல்
யாருடனும் கடினமாகப் பேசாதே
Do not utter harsh or rude words
KondraiVendhan-12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
Jealous words destroy one’s prosperity.
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் -Nalvazhi-33
பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்
The arrow that pierces the skin of an elephant cannot go through a bundle of soft cotton. The rock that resists the thrust of a crow-bar, gives way to the piercing roots of a soft tree. (Why use harsh words when kind words can get results)
Aathisoodi-2. ஆறுவது சினம்
ஆறுவது- தவிர்க்க வேண்டியது, சினம் - கோபம்.
Anger should be reduced / controlled
Aathisoodi-5. உடையது விளம்பேல்
உனக்கு உள்ள பொருளை அல்லது இரகசியங்களை, பிறர் அறியும்படி சொல்லாதே
Do not boast about your possession. Keep your secrets with you.
Aathisoodi-12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
Never envy / talk bad about others
Aathisoodi-15.ஙப் போல் வளை.
'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும். "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
Be flexible. Preserve the bonds. Do not break down during trouble.
Aathisoodi-25.அரவம் ஆட்டேல்.
பாம்புகளை பிடித்து விளையாடாதே.
Do not play with snakes. Donot play with dangerous things including people.
Aathisoodi-32. கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
Never hurt people with bad words
Aathisoodi-35. கீழ்மை யகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு
Stay out of vulgar, bad actions
Aathisoodi-36. குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
Maintain your good habits (do not discontinue). Don’t give up good character
Aathisoodi-42. கோதாட் டொழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
Leave playing illegal or dangerous games
Aathisoodi-47. சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
Do not forget righteousness. Donot loose Good habits which will give fame.
Aathisoodi-49. சூது விரும்பேல்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
Don’t be interested in gambling. Never like gambling.
Aathisoodi-68. நிலையிற் பிரியேல்
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
Don’t give up on principles
Aathisoodi-69. நீர்விளை யாடேல்
வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே
Do not play in large waters (like dam, river). Take extra care and precautions.
Aathisoodi-74. நைவினை நணுகேல்
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
Do not do anything that is destructive
Aathisoodi-80. பீடு பெறநில்
பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
Others should honur your actions
Aathisoodi-87. போர்த்தொழில் புரியேல்
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
Avoid getting into unnecessary trouble scenarios. Do not be quarrelsome.
Aathisoodi-88. மனந்தடு மாறேல்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
Do not get mentally disturbed
Aathisoodi-92. முனைமுகத்து நில்லேல்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
Do not start a fight
Aathisoodi-99. வல்லமை பேசேல்
உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே
Do not praise your own talents
Aathisoodi-100. வாதுமுற் கூறேல்
முந்திக்கொண்டு வாதிடாதே
Do not gossip and get into arguments
KondraiVendhan-17. கீழோர் ஆயினும் தாழ உரை
உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு
Speak with humility even to the lowly born
KondraiVendhan-19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே
However sharp mentally (or strong), do not brag
KondraiVendhan-24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
Rumour in the ear of a gossipper is like fire fanned by wind.
KondraiVendhan-25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை
எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்
Speaking ill of others brings enmity from all. Become enemy of everyone, friend of none.
KondraiVendhan-28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
கோபத்தைக் கட்டுப்படுத்துவது தவத்தின் அடையாளம். தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே
Controlling anger is a mark of penance
KondraiVendhan-31. சூதும் வாதும் வேதனை செய்யும்
சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்
Gambling and unnecessary arguments can only bring distress
KondraiVendhan-40. தீராக் கோபம் போராய் முடியும்
கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும்.இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்
Uncontrolled and prolonged anger will result in big fight. Forget and move on.
KondraiVendhan-42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
Wives who speak ill of their husbands are like the Lord of death. Should have been persons speaking ill of their spouses are like Lord of death.
KondraiVendhan-56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
Do not insult even the weak or unfortunate or those at the bottom.
KondraiVendhan-66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
A woman’s jewels are her pretence of ignorance.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம் -Moodhurai-23
சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட கல்லைப் போலப் பிரிந்து விடுவர். பெரும் சினத்தால் பிரிந்தாலும் பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே
Anger by some, can be made good like a crack in gold
But the anger of the wicked lasts like a crack in a rock.
The anger of noble men who lead a decent life
Vanishes like a scar made on water with an arrow
Aathisoodi-20.தந்தை தாய்ப் பேண்.
உன் தந்தையையும் தாயையும் அன்புடன் காப்பாற்று.
Care and protect your parents
Aathisoodi-81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
Protect those who appreciate you
KondraiVendhan-1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
Mother and Father are the first known Gods
KondraiVendhan-38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தாயே சிறந்த தெய்வமாகும்
There is no greater God than one’s own mother.
KondraiVendhan-37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும்
No advice is greater than your father’s words.
KondraiVendhan-3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
Domestic life is virtuous, Anything else is not. Proper married life is best way
KondraiVendhan-41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
An unsympathetic wife (or spouse) is like fire in one’s lap
KondraiVendhan-8. ஏவா மக்கள் மூவா மருந்து
செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
Anticipation by children is panacea for parent’s ills
KondraiVendhan-26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
பெற்றோர்கள் எளிதில் விட்டுக்கொடுக்காதபோது குழந்தைகள் வளர்கிறார்கள். குடும்பம் தழைப்பதற்கு அழகு
Children flourish when parents do not easily give in
KondraiVendhan-27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
Duty of parents is to raise noble children. Noble children will make their parents great.
KondraiVendhan-10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
Marry one and be faithful to him
KondraiVendhan-14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
கணவன் சொல்லுக்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு
Chastity is being true to one’s word
KondraiVendhan-15. காவல்தானே பாவையர்க்கு அழகு
காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு
Protecting her chastity is woman’s beauty.
KondraiVendhan-30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.
Beauty of the relatives is to be around, in times of need
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி -Nalvazhi-16
கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம்/பெருமை அது இருக்கும் நிலத்தின் தன்மையினாலும், நல்ல மனிதர்களின் குணம்/பெருமை அவர் செய்யும் தர்ம காரியங்களினாலும், கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலமும், சிறந்த பெண்ணின் குணம் /பெருமை அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினாலும் நீ அறியலாம்.
Water from good underground source, people of charitable nature Eyes those are filled with kindness, and women who are chaste Know thee! These are the wonders of this world that is surrounded on all sides by the sea.
நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் ; பாழே
மடக்கொடி இல்லா மனை -Nalvazhi-24
திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும், நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும், நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும், ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும், நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,
A fore-head without religious mark is a waste, Food without gee, and country without a river are all waste A person without other siblings is a waste Worst of all is a house without a damsel of good character.
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர் -Nalvazhi-29
ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை, அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு)
When the tree is full of ripened fruits Nobody invites the bats to feed on them If one gives like a cow that gives milk to its calf The whole world will arrive claiming kinship.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு -Moodhurai-3
இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே
The wealth that is gained during late in life
Cannot mitigate the misery suffered when young
A woman who spent her youth without a man
Is like a flower that blooms past the season.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும் -Moodhurai-21
நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.
With a wife who tends the home, there is nothing lacking
With a wife who uses harsh words, It is better that she is absent
The house where such a wife resides
Will turn into a lair where a tiger lives.
Aathisoodi-19.இணக்கம் அறிந்து இணங்கு.
இணக்கமான நபர்களுடன் நட்பு கொள்ளுங்கள், அவர்கள் உங்களை விரும்புவார்கள் மற்றும் உங்கள் குறைபாடுகளை பொறுத்துக்கொள்ளலாம். அவர்கள் உங்கள் வகையாக இருப்பார்கள் அல்லது உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
Make friends with compatible people, who will like you and tolerate your shortcomings. They will be your type or can complement you.
Aathisoodi-37. கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
Do not give up good friends. (spoil friendship)
Aathisoodi-51. சேரிடமறிந்து சேர்
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு. (ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.?)
Choose wise company/friends. Make friends with the best behaviour and character.
Aathisoodi-78. பாம்பொடு பழகேல்
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
Keep away from snakes and dangerous or wicked people
Aathisoodi-83. பெரியாரைத் துணைக்கொள்
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
Seek help from elders, great and wise people
Aathisoodi-85. பையலோ டிணங்கேல்
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
Do not get along with fools. Avoid company of small useless boys/girls.
Aathisoodi-93. மூர்க்கரோ டிணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
Do not deal with aggressive / stubborn people
Aathisoodi-108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே. நண்பர்களாக நடந்துகொள்ளும் மற்றும் செயல்படும் நண்பர்களையும் எதிரிகளையும் வேறுபடுத்துங்கள்.
Do not believe in your enemy. Distinquish between friends and enemies who behave and act like friends.
KondraiVendhan-84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்
வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
Friendship with the brave gives protection like a sharpened arrow.
KondraiVendhan-47. தோழனோடும் ஏழைமை பேசேல்
நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
Do not divulge, about your poverty, even to your close friend
KondraiVendhan-83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது
If guests are not fed or treated properly, it indicates poor household.
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் -Moodhurai-4
நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர் நட்பு.
Men with low morals do not make good friends.
Noble persons do not change and make good friends, like milk however long heated will not lose its taste. Noble even if they suffer poverty will be great, like conch-shells remaining white even when burnt.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம் -Moodhurai-15
புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும் வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப் போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும் உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்
The medicine man who treated the tiger’s illness
Became its food when it was cured of its disease.
Likewise, any help rendered to small minded men
Becomes useless like a pot dropped on a rock
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு -Moodhurai-17
குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு.
Like the birds that leave the pond when it is dry
The unfaithful will desert you when your wealth is lost.
But like the plants that have taken root in the pond
Sincere people will stay with you whatever it entails
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று -Moodhurai-8
நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும் அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நல்லது.
It is beneficial to see people of good character,
It is beneficial to listen to their words,
It is beneficial to talk about their lives and
It is beneficial to have them as friends
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. -Moodhurai-9
தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே.
It is harmful to see the wicked,
It is harmful to listen to their words,
It is harmful to talk about their character and
It is harmful to have them as friends
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு -Moodhurai-20
வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று விடுகிறது. எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல, அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.
Do not depend heavily on your relatives and siblings
For the disease that kills too is born with you.
There are those at a distance who can help you
Like the herbs from the mountain that cures you.
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம் -Moodhurai-24
குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்
The swan in a pond seeks out the lotus flower, likewise
The learned will reach out to other learned men, but
The wicked will only seek out other wicked people
Like a crow that seeks out a dead body
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். -Moodhurai-25
தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர்
The poisonous cobra hides itself to avoid getting killed
The water snake moves about freely as it is in no danger
Those with a deceitful heart hide themselves from others
While those of pure heart move about freely unhindered.
Aathisoodi-3. இயல்வது கரவேல்
நம்மால் முடிந்ததை வறுமையினாலே இரப்பவர்களுக்கு கொடுப்பதற்கு ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)
Help the needy or deserving to your best possible extent
Aathisoodi-4. ஈவது விலக்கேல்
தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை தடுக்காதே
Don’t stop doing charity or anyone doing charity
Aathisoodi-9. ஐயம் இட்டு உண்
உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்த பிறகே நீ உண்ண வேண்டும்.
Before eating, share food with those who need
KondraiVendhan-4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
The miser’s wealth will be taken by the wicked.
KondraiVendhan-9. ஐயம் புகினும் செய்வன செய்
பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
Do what is right, even if reduced to begging.
KondraiVendhan-34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்
If you can afford, first feed the hungry before you eat.
KondraiVendhan-58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை
உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
Penance to God is to avoid killing animals to eat.
KondraiVendhan-70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்
Even if rare (or speciality/costly), share it with your guest.
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு -Nalvazhi-3
நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்
This body is just a bag full of pain and distress. Do not believe in this unreal fed mortal body or that this body will last for ever. You will wallow in misery if you do not help others, when able to help. But if you help, you will attain bliss at last.
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து -Nalvazhi-9
கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.
Though the dry river bed may be hot to the feet, it may yield a little water from the spring underneath. Similarly, even if noble persons become poor or in hard times, they will not refuse charity to those who are in need, like under-water spring - Aid seekers From people of noble birth even Never get turned away agreeably.
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்? -Nalvazhi-17
வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா ? அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா ? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.
Blaming the Gods for the effects of one’s sins is not going to bring much wealth. Unless one learns that not giving to charity when possible is sin their empty pot is not going to get filled.
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் -Nalvazhi-18
அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
There are no parents, children or any other relatives to those misers who are tight with their fist. They will not give even when asked with reverence But will only give when threatened with violence.
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து -Nalvazhi-32
ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.
The wealth of a man rises and falls Like the ground under a flowing river So giving to charity when one is wealthy Increases the worthiness of one’s life.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர் -Moodhurai-2
நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்
The help given to a good man
Is like letters carved on a stone
But the help given to a man unkind
Is like writings on the surface of water
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. -Moodhurai-28
தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம் குறைவதில்லை. அதைப் போலவே தாராள குணம் படைத்த அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம் மாறுவதில்லை
The sandal wood even when ground down
Does not lose its sweet smell,
The good king even if he had lost his wealth
Does not lose his will to give
Aathisoodi-44. சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். அரசாங்க ஆணைப்படி வாழ வேண்டும்.
Follow your government rules (laws of land)
Aathisoodi-62. தேசத்தோ டொத்துவாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
Be Friendly with fellow citizens or residents (No enemity). Live and adopt your country’s livelihood
Aathisoodi-64. தொன்மை மறவேல்
பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)
Do not forget old / past antiquities/heritage/ancestory.
Aathisoodi-67. நாடொப் பனசெய்
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
Perform acts that are agreeable to your nation or place you are living.
Aathisoodi-104. ஊருடன் கூடிவாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
Have a sense of unity among the people you live with
KondraiVendhan-6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
Animosity towards the community uproots the whole family. Quarrel with everyone intown will ruin completely
KondraiVendhan-23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
The ruler should identify and find out where their help or involvement is required and do the needful.
KondraiVendhan-49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
Prosperity of the land makes its citizens happy and removes any misery.
KondraiVendhan-73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
மாலுமி இல்லாத ஓடம் செல்லாது
A ship will not sail if there is no sailor.
KondraiVendhan-88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை
அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
The ruler’s anger makes one helpless.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். -Moodhurai-11
நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை
Though it is the rice that grows into a stalk of paddy
It will not grow if the outer husk is removed.
Even men of ability cannot complete their job
Without the help of the people around
Aathisoodi-6. ஊக்கமது கைவிடேல்
உற்சாகத்தை (தன்னம்பிக்கை/ விடாமுயற்சி) இழக்காதே.
Do not give up hope/self-confidence. Be motivated.
Aathisoodi-43. கௌவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
Eliminate troubles or worries in life
Aathisoodi-50. செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
Do things (duty) with perfection
Aathisoodi-52. சையெனத் திரியேல்
பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
Avoid being insulted because of uselessness
Aathisoodi-54. சோம்பித் திரியேல்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
Don’t be lazy and idle your time
Aathisoodi-59. துன்பத்திற் கிடங்கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
Do not allow suffering. Never abandon any work, because it will involve effort or suffering.
Aathisoodi-60. தூக்கி வினைசெய்
ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
Think, analyze and plan very well before you act
Aathisoodi-65. தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
Should know when to give up if sure of defeat. Smart general should know when to retreat.
Aathisoodi-89. மாற்றானுக் கிடங்கொடேல்
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
Don’t let the enemy succeed you
KondraiVendhan-32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
தவம் செய்வதை (கடந்த கால திறமைகளை) விட்டு விட்டால், அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்
Forgetting past or acquired skills will lead to helpless state and present endavours will fail.
KondraiVendhan-36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
Those who are lazy will wallow in misery.
KondraiVendhan-46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
Food earned by one’s toil is tastier than food from servitude.
KondraiVendhan-52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்
Evaluate before attempting even the simplest task
KondraiVendhan-55. நேரா நோன்பு சீராகாது
மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது
A job (activity) not done with dedication will not be a good job, one can be proud of.
KondraiVendhan-57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்
Even the poor/unfortunate/weak could one day rise above, with their work
KondraiVendhan-67. பையச் சென்றால் வையம் தாங்கும்
நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்
A cautious approach is secret for victory or success. Will be appreciated by all
KondraiVendhan-69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்
தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்
Food by one’s own toil is good food.
KondraiVendhan-77. மேழிச் செல்வம் கோழை படாது
கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது
Wealth earned by tilling the land will not be wasted.
KondraiVendhan-79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்
Ignoring wise words is sure to bring destruction or Sure to fail.
KondraiVendhan-86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
Motivation enhances a man’s possessions.
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு -Nalvazhi-4
கண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்.
Things will happen only when it is destined to happen. Expecting success when the time has not arrived is like a blind man throwing a stick at the mango tree expecting it to hit a mango and make it fall. Benefits for some from deeds aimed Ineffective unless done right. For anything to be successful, job has to done by right person with right tools, at right place and right time.
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு -Nalvazhi-6
கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?
The wealth that you get is what you deserve however hard you may try to earn like others. You may sail the vast seas to seek your fortune, Still you would earn only what is destined for you. Greedily expecting that we should have everything what others get, will lead no where, but only unhappiness and misery?
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தெரியாது காணும் தனம். -Nalvazhi-8
உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.
Your toil to acquire wealth may be many, But you will not become rich unless destiny decrees so. Oh! Restpectful people of this earth, even the material wealth one may have now, may not stay for long (highly volatile).
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு -Nalvazhi-12
ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.
The tree that stood at the edge of the river Or even the life known to the king may fail. Nothing is better than tilling your land for food For all other vocations have their own faults.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு -Moodhurai-16
நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது
Do not ignore the men who patiently wait
Assuming that they lack the know-how to achieve
For the stork that waits at the sluice head patiently
Leaves small sprats alone and waits for larger fish.
Aathisoodi-16.சனி நீராடு.
சனி(குளிர்ந்த) நீராடு.
shower with clean cold water. Custom to take oilbath on Saturday.
Aathisoodi-22.பருவத்தே பயிர் செய்.
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
Do things in the right time
Aathisoodi-26.இலவம் பஞ்சில் துயில்.
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
Sleep on silk cotton bed (healthy matress which is important for sleep.)
Aathisoodi-31.அனந்தல் ஆடேல்.
மிகுதியாக தூங்காதே
Do not sleep long hours
Aathisoodi-70. நுண்மை நுகரேல்
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
நு நுண்மை நுகரேல் Do not eat food items that can cause illness
Aathisoodi-72. நெற்பயிர் விளை
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
Perform agriculture (ex: paddy cultivation). Food essential for life.
Aathisoodi-76. நோய்க்கிடங் கொடேல்
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
Do not give room for disease. maintain your health (healthy food, habits etc)
Aathisoodi-82. பூமி திருத்தியுண்
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
Cultivate (correct and improve) the land and feed others.
Aathisoodi-91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
Do not eat excessive food
Aathisoodi-107. வைகறை துயிலெழு
விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு. சூரியன் உதிக்கும் முன்பே
Get up from bed early in the morning
KondraiVendhan-5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
The smaller the meals, the prettier the woman. Diet control is beauty secret (for females especially)
KondraiVendhan-29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
Seek your wealth by tilling the land
KondraiVendhan-33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
Even a (night) watchmen will need some sleep. Have to sleep for a short while
KondraiVendhan-45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
Sleep in a warm house during cold months and cool house (thatched) during hot months.
KondraiVendhan-60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்
Eat at the proper time, even food mixed with milk.
KondraiVendhan-62. பீரம் பேணி பாரம் தாங்கும்
தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்
Breast milk gives vitality and makes baby strong.
KondraiVendhan-76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
It is good to sleep on a soft or good mattress.
KondraiVendhan-90. ஒத்த இடத்து நித்திரை கொள்
பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு
Sleep in a suitable confortable convenient place.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது -Nalvazhi-11
ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.
You are unable to miss a days food, Or refuse to take two days worth in one sitting, You do not understand the pain I suffer You irksome stomach! It is difficult to live with you!
KondraiVendhan-21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்
Determination and perseverance during adversity leads to final success and eventually increases one’s wealth.
KondraiVendhan-59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
One’s fortune is seen from the yield of his toil (farming efforts)
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் -Nalvazhi-5
நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.
The things that you desire, you will not get, The things that you want rid of, will not go away. It is fate, no point in worrying long, making the body suffer (physical and mental pain).
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல் -Nalvazhi-13
வாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை. ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது, அவர் அவரின் வினைக்கேற்ப உள்ள பலன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.
Who can destroy the wealth of a person or prevent the death of someone else or can stop a person begging without rest. As all these are determined by one’s fate.
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி -Nalvazhi-30
ஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மன்னனே (மனிதர்களே) ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்? , ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.
Oh King! A wrong doer need not be punished Even if the whole country wants it! The wrong doer cannot escape his sufferings For his previous sins will decide his fate.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா -Moodhurai-5
கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.
Things happen only when the time comes
However hard one tries his best,
For even the trees that grow so high
Do not bear fruit until the season comes.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். -Moodhurai-19
தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் முன் ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.
However deep you immerse your pot in the sea
It cannot take more water than it can contain.
Even with a good husband and immense wealth
Your fate governs what is in store for you
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. -Moodhurai-22
மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?
Things happen as previously destined
Not according to one’s laid out plans
If you expect the good and receive the bad
It is because of your past sins
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம் -Moodhurai-29
ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும் லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவனுக்கு இருக்கும் வரையில் தான். அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும்
When the lady luck favours you
Kind relatives, wealth, looks and status
All will arrive at your door step.
All will be lost, when she decides to leave you
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு -Nalvazhi-7
எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.
This body is nothing but a space for worms and diseases (host of cruel pathogen). The wise know it and live unattached Like drops of water upon a lotus leaf. Others may fail to observe and understand this.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் -Nalvazhi-10
பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .
Even when one wails rolling on the floor, year after year, the dead are not going to come back. That is the way everyone goes and until that final day comes, do not worry. Feed, be fed and be merry.
Aathisoodi-8. ஏற்பது இகழ்ச்சி
To accept alms is a shameful act
Aathisoodi-18.இடம்பட வீடு எடேல்.
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
Build your house meeting your needs
Aathisoodi-86. பொருடனைப் போற்றிவாழ்
பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
Save wealth without wasting unnecessarily
Aathisoodi-98. மோகத்தை முனி
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
Have control on your urges to buy things you want. You donot need most of the things you want. Can even apply to place, people etc
KondraiVendhan-13. அகமும் காசும் சிக்கெனத் தேடு
சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
Land and wealth should be accumulated quickly.
KondraiVendhan-16. கிட்டாதாயின் வெட்டென மற
நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு
Forget it, if not attainable (especially wealth)
KondraiVendhan-35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.
Those who are wealthy, will fulfill their needs
KondraiVendhan-39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்
Seek wealth, even by riding the waves
KondraiVendhan-44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
Spending without any earning will result in penury.
KondraiVendhan-81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்ய வேண்டும்
Even the super-rich like great chola emperor, should spend within limits.
KondraiVendhan-85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
A worthy or great person does not solicit aid or request funds etc.
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும் -Nalvazhi-14
நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.
To noble men, what is worse than begging is to Face insults and praise people, so as to be fed. Rather than lose one’s honour and continue living It is better to die, than filling the stomach to live.
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம் -Nalvazhi-19
பிறருக்குச் சலாம் போட்டும், அடுத்தவரிடம் சென்று இரங்கி உதவி கேட்டும், உறவுகளை விட்டு அகலமான கடல் கடந்தும், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும், அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிறால் தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது.
Men worship others, beg and cross vast oceans, make pretences, roam the earth, and praise others. All these are for the sake of a measure of rice, Just to get rid of the pain of hunger.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் -Nalvazhi-22
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.
Oh! Listen, You toil hard to earn your money Then you bury it so that no one can steal it. Once your soul has left your body Who is there left to enjoy that spoils?
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம் -Nalvazhi-26
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.
Honour, class, learning, strength, knowledge Sense of charity, austerity, aspirations, perseverance Desire for women of sweet talk, all these ten will vanish Whence one is confronted with hunger.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு -Nalvazhi-25
ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும் , போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.
If you tend to spend more than what you earn You will lose your reasoning and the respect of all. A thief to everybody and a sinner in all your births Good people will shun you calling you wicked.
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல் -Nalvazhi-34
ஒருவன் கல்வி கற்கவில்லை என்றாலும், அவன் கையில் பொருள் இருந்தால் அவனுடன் எல்லாரும் சென்று உறவாடுவர். கையில் பணம் இல்லாதவனை வீட்டில் இருக்கும் மனைவியும் மதிக்க மாட்டாள், பெற்றெடுத்த தாயும் வேண்டாள். அவன் சொல்லும் வார்த்தை செல்லாது, சபையில் எடுபடாது.
If one had wealth even though he is not learned, That wealth makes him welcome by everyone If poor, his wife and his mother will not want him Even his words will not be accepted as truthful.
Aathisoodi-63. தையல்சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
Do not be carried away by wife's (spouse) words, with out analyzing or understanding interior motives. Do not accept things blindly, use your brain?
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் -Nalvazhi-27
ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும்.
Desiring one thing and getting another instead Or receiving even the things that is desired for, Getting something when one is not expecting it All these are the work of the almighty who rules me.
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான் -Nalvazhi-28
நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.
All one needs is a plate of food and a length of cloth But one desires for millions of things. But the life of people who do not realize this Is brittle like a clay pot and is filled with misery.
Aathisoodi-94. மெல்லினல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
Be truthful to your wife (spouse)
Aathisoodi-96. மைவிழியார் மனையகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
Keep away from people who are jealous (prostitutes)
KondraiVendhan-61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
Virtue is not lusting other man’s wife (person's spouse)
KondraiVendhan-78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
Stay away from women of ill-repute.
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும் -Nalvazhi-20
கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.
The frolics of those in love with loose women, is like getting into a river carrying a grinding stone, It is not good either for this life or to the after life It will also reduce one’s coffer and make it empty.
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம் -Nalvazhi-36
நண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அது அழியும் காலம் வந்தவுடன் கன்று ஈனும். கன்று வருவதை வைத்து இது அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம். அது போல் ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை வருவதை அவர் பிறர் மனையை பார்க்கத் தொடங்கியதில் இருந்து நாம் அறியலாம்.
It is natural for the crab, the oyster and the banana tree to lose their lives when bringing forth a new progeny. So is lusting after a beautiful woman which will naturally destroy the wisdom, wealth, and education of the man
KondraiVendhan-65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது
Spiritual liberation delivers one from worldly bondage (free from anger)
KondraiVendhan-80. மோனம் என்பது ஞான வரம்பு
மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை
Keeping quiet is prelude to gaining spiritual knowledge.
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி -Nalvazhi-31
இலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது. உயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று, திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது. தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்
It is better to have a good tune when the poem is faulty It is better to have good morals than belong to the upper class It is better to be ill than having false bravery It is better to stay single than have a disgraceful wife
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். -Moodhurai-27
கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத் தரும். தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு அதன் கன்று அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.
To the illiterates, words of wise men spell death
For the wicked, justice is the God of death
For the banana tree, its yield of fruits spells death and
A wife who always disagrees brings a man’s death
அரியது:
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
பெரியது:
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.
இனியது:
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே
கொடியது:
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே