⇰ To Index Page |
Tirukkural Summarized for All |
Out of 1,330 Kurals, around 300 are selected and presented under 18 sections listed below. Click at section name, to go to any section. Explanations or Meanings are given in Tamil and English, which can be of help to people who donot know Tamil or not comfortable with some Tamil words.
|
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை. பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இவர் சிறப்பினை அறியலாம். வேலும் பல்லுக்குறுதி என்றால் இரண்டு மரக்குச்சிகளையும் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாகும். நாலும், இரண்டும் சொல்லுக்குறுதி என்றால் நாலடியாரையும், திருக்குறளையும் படித்தால் சொல் உறுதியாகும்.
திருவள்ளுவர் உரை எழுதவில்லை. மணக்குடவர் உரை (காலம் 10 ஆம் நூற்றாண்டு) இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது. மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய ஐவரின் உரைகளே இதுவரை கிடைத்துள்ளன. The Kural has been dated variously from 300 BCE to 5th century CE. The scholars like Somasundara Bharathiar, Rajamanickam, Kamil Zvelebil, Vaiyapuri Pillai have dated differently. In addition to palm leaf manuscripts, the Kural literature had been passed on as word of mouth for generations.In 1921, the Tamil Nadu government officially declared 31 BCE as the year of Valluvar. There are 133 chapters in all, each chapter contains ten Kurals. Thirukural consists of three books, the first book on aram (the way or dharma), the second on porul (material or artha) and the third on inbam (joy or kama). The first letter of Thirukkural is அ; the last letter is ன், the first and last alphabets of Tamil language. Five virtues in Indian belief systems such as: Hinduism; Buddhism; and Jainism are stressed in Kural.
|
1) உலகளாவிய உண்மை திருக்குறள். குறளின் இன்னொரு பெயர் பொய்யா மொழி. திருவள்ளுவர் - பொய்யாமொழி புலவர். உண்மை மட்டுமே நிலைத்திருக்கும். காலம் மாறினாலும் உண்மை மாறாது. உண்மையே இறுதியில் வெல்லும்.
கவிதைக்கு பொய் அழகு. கவிதைக்கு பொய் பரவாயில்லை. கட்டுரைக்கு உண்மையே வேண்டும்
கதைக்கு மிகை தேவை. கட்டுரைக்கு அல்ல .
எல்லோரும் எப்போதும் எவ்விடத்தும் ஏற்கவேண்டிய
பயனுள்ள நூல் திருக்குறள் (kural extension)
Universal truth. Useful guide to Everyone anywhere any place anytime
2) எளிய கருத்து எல்லோருக்கும் புரியக் கூடியது.
எளிய தீர்வு சிறந்த தீர்வு
எளிய மற்றும் நடைமுறை வழிகாட்டி
குறுகிய மற்றும் புத்திசாலித்தனமாக ஆலோசனை அறிவுரை. கட்டளையிடுவது அல்ல, கட்டாயப்படுத்துவது அல்ல. தேவையில்லாத பயத்தை உருவாக்கவில்லை.
வாசகர்கள் தாங்கள் விரும்புவதை அல்லது தங்களுக்குப் பொருந்துவதைப் புரிந்துகொள்ளவும் எடுத்துக்கொள்ளவும்
A simple concept that can be understood by everyone.
Simple and practical solution is best solution - KISS – Keep it short and smart
Advises and gives guide lines. Not order, forcing one to do. Not creating unnecessary fear.
Readers are free to interpret and take what they want or applicable to them
3) நாடு, சமயம் கடந்த பொது நெறி (மதங்கள் இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறியிருக்கின்றன)
Living Guide beyond Nation, religion, race, language etc
4) தர்க்கம் மற்றும் பொது அறிவு அடிப்படையில் எழுதப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நன்கு நிரூபிக்கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்தவற்றைக் கொண்டுள்ளது
வேறு எந்த ஆதார ஆவணங்களும் தேவையில்லை. மற்ற புத்தகம் தேவையில்லை
Written based on logic, experience and common sense. Common sense is uncommon.
5) வாழ்க்கையில் குறிக்கோள்:அறம் பொருள் இன்பம் வீடு (தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம்)
அறம் தழுவி பொருள் ஈட்டி
இன்பமாய் வாழ்ந்து விடு (kural extension)
அறவழியில் நடந்து பொருளீட்டி முறையாக இன்பம் பெறு. தமிழர் (நன்மக்கள்) பொருள் ஈட்டி அறம்செய்து இன்புற்றனர்
தழுவி நிற்பது அறம். கடமை என்று பொருள் உண்டு. முப்பத்திரண்டு வகையான அறங்கள்
Earn your livelihood by right ways/means, enjoy your life and leave the world happily.
Similarity (with differences) with Arthasastra by Kautilya, Manu, Kamandaka, Niti Shringara-Vairagya Shataka by Badhragiri, and the Kamasutra. Overlap on core principles/truths with Jain, saivam, vainavam literature
'இயற்கையே இறைவன்' என்பதை வான்சிறப்பு அதிகாரம் உணர்த்துகிறது. வான் விண்ணைக் குறிக்கும். விண்ணில் நிலவும் மேகத்தின் வழி பெய்யும் மழையின் பெருமையையும் குறிக்கும். வானில் உள்ள கதிரவன், பூமி, மற்ற வைகளையும் குறிக்கலாம் இல்லையா? அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம் நீர்
Nature is God. Tamil word Van represents the sky. So sky includes, sun, clouds, rain and celestial objects. So these ten poems may also refer to many celestial objects? Water is the source of all life. Rain is one component of large natural cycle, which includes sun, moon affective tides, movements of other astronomical bodies, land, ocean/sea, wind etc
Thiruvalluvar presents God as an immutable, infinite entity and contrasts this with the limitations of human existence. (the concept of "infinity"). This supreme entity is necessary to cross the "boundless ocean of births". The divine is described as pure knowledge, which is infinite, whereas human knowledge is limited.
There is no agreement among philosphers, saints or religions on nature of omnipotent omnipresent God or Almighty. Although Valluvar attempts to answer some of the questions regarding the ultimate reality, he has left it to individuals, to choose whatever appeals to them.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு Kural-1
பல மொழிகளைக் கொண்ட எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. வாய் திறக்கும் முதல் முயற்சியில் பிறப்பது [அ]. அதுபோல் பல்வேறு உயிர்களைக்கொண்ட இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது. தனித்திருந்து நம்மை ஆளும்போது ஆதி.
நமக்குள் பகுதியாக விளங்கும் அவன் பகவு. எள்ளின் பகவாகிய எண்ணெய் போலக் கலந்திருக்கும் பகவன். உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பது 'இறை'. (பகவன் - பகலவன் is it sun making day?)
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world. (pakavu refers to God who is a part of us. pakavu refers to oil in Sesame seed and God is pakavu or essence of everything. Bhagvan comes from the Sanskrit bhaga, meaning fortune or wealth. Bhagavat means blessed. Bhagvan - bhakta)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். Kural-2
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?. பயனில்லை.
What is the use of the education one has learned if one does not pray to the Lord (God), who is the form of pure knowledge? No use from education or learning.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். Kural-3
மலர் போன்ற அன்பரின் மனத்தில் இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவரின் புகழ், உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
They who are united to the glorious feet of God who resides in the flower of the mind, shall flourish long in all worlds. Their fame will live for long time.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. Kural-4
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் (நடுநிலை, பாரபட்சமற்ற நீதி) திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
To those who meditate the feet of God who is void of desire or aversion, evil shall never come.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. Kural-5
கடவுளைப் புரிந்து கொண்டவர்களை, அறியாமையால் விளையும் இருவகை வினையும் (நல்வினை, தீவினை) சேர்வதில்லை. புகழுடன் எல்லாரிடமும் அன்பு செலுத்தி வாழ்வார்கள்
People are living in the world of good and evil. Enlightened ones live beyond this, free from right and wrong. They Live in fame, loving every one (everything). Compassionate ones love everyone, both right and wrong. (Like a doctor tries to treat both good and bad people)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். Kural-6
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வாயிலாக பிறக்கும் ஆசைகளை அழித்து, உண்மையான ஒழுக்க வழியிலே நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
Those shall long proposer who abide in the faultless way of God who destroys or has destroyed the craving (five desires) of the senses
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. Kural-7
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளை நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
Anxiety of mind or worries cannot be removed, except from those who are united to incomparable God's feet (who surrender to God).
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. Kural-8
அறத்தின் பொருளாக விளங்கும் கடவுளை அறிந்த (அந்தணர்) சான்றோர் சொற்படி, கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல், மற்றவர் இன்பதுன்பக் கடல்களை நீந்திக் கடப்பது கடினம்.
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious being (God?) who is a sea of virtue. Following path of great people (God?) is the easy way, to lead a comfortable happy life.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. Kural-9
எண்ணும் நல்ல குணங்களுக்கு (ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள்: தன்வயப்படுத்தல் ; தூய்மை; இயற்கை; பாசங்களுக்கு அப்பாற்பட்டவர்; முடிவில்லா ஆற்றல்; வரம்பு இல்லா இன்பம்) எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
Those who do not worship the feet of God, who possesses eight ideal attributes mentioned in scriptures (attractive; Pure; personification of nature; know all; free with out bondage/universal; compassionate; unlimited ability/strength; and unlimited bliss/happinessas), is as useless as a sense without the power of sensation
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். Kural-10
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்
Those who surrender at the feet of God, will cross the great ocean of life; others will not. Life is a tough journey and belief in God, helps us to face challenges along the way. It is a medicine for life stress.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. Kural-11
உரிய காலத்தில் மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது. அதனால் மழை உயிர்களுக்கு அமிழ்தம். மழைக்கு காரணமான கடலும் அமிழ்தம்.
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. Kural-12
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
The rain makes the food we eat also it (rain water itself) is a food and drink
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி. Kural-13
வானம் மழை பொழியாவிட்டால், பசி நீக்கும் உணவு கிடைக்காது. நீரால் நிறைந்த அகன்ற உலகமாக இருந்தும் உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், உயிர்களைப் பசி வருத்தும்.
Though covered by water (sea/ocean) on all sides, If there is no enough rain, People living on earth will suffer from hunger (famine/draught)
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். Kural-14
மழைப் பொழிவு குறைந்தால் (புயல் என்று அழிக்கும் வெள்ளபெருக்கும் தனது தன்மையை இழந்தால்) உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவர்கள் ஏர் கொண்டு உழமாட்டார். உழவுத் தொழில் குன்றி விடும். மழையைக் குறிக்கும்?
If rainfall decreases (also destructive storm-flood responsible for water availability), food-producing farmers will not plow the land. Farming will decline.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. Kural-15
அழிப்பதுவும் வளம் செய்வதுவும் மழை. பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
Rain does everything, both destroying and enriching land and life on earth. Absense of rain creates draughts and excessive rain can creates floods. But rain water is essential to sustain life.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. Kural-16
வானத்திலிருந்து (மழைத்துளி) மழை பெய்யா வி ட்டால், புல்லும் முளைக்காது. பசும்புல்லின் நுனியைக்கூட காண்பது அரிதாகிவிடும்.
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen. So forget about growing food.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின். Kural-17
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடல் கூட வற்றிப் போகும்.
Even the wealth of the large sea will be diminished, if the cloud that has drawn (its waters) up, does not give water back again as rain.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. Kural-18
மழையில்லை என்றால் தெய்வங்களும் நினைக்கப்படுவது இல்லை. மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின். Kural-19
அறங்கள் தழைக்கவும் மண்ணுலகில் மழைபெய்தல் இன்றியமையாதது. மழை பெய்யவில்லையானால், இந்த விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது. தன்னை உயர்த்தும் தவமும் இராது.
Rainfall in this spacious world, is essential for the cultivation of virtues. If it does not rain, there is money, for charity to give to others. People will not be interested in penance and alms-deeds.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு Kural-20
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
There can be no life or nothing one can do, without water. So without rain there cannot be any flowing water. With out rain, there will be chaos every where.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. Kural-391
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். - வாழ்க்கைக்கான வாழ்நாள் முழுவதும் கற்றல்
Let one learn thoroughly whatever one can (no limit, maximum), and let his conduct be worthy of his learning. Learning for life. life long learning or journey, no end or limit
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. Kural-392
மக்களுக்கு எண் மற்றும் எழுத்து எனப்படுவதுமாகிய இந்த இரண்டும் கண்களைப் போன்றது. கணிதம் மற்றும் மொழிப் படிப்பு இரண்டு கண்கள் (உலகைச் சுற்றிப் பார்க்கும்/புரிந்துகொள்ளும் முறைகள்)
Letters and numbers are the two eyes of man. Mathematics and Language studies are two eyes (methods to see/understand world around).
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு Kural-396
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்
Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. Kural-397
கற்றவருக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவர் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?
Every country is one's own country to the learned; Every city is a hometown. Knowing this, why does one not study even till death?
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. Kural-398
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. ஒரு நோக்கத்திற்கான கல்வி ஒருவருக்கு மற்ற ஏழு நோக்கங்கள் அல்லது வழிகளிலும் உதவும்.
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births. Education for one purpose will help one in seven other purposes or ways also.
தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் . Kural-399
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். ஒரு படித்த நபர் தன்னை மேம்படுத்துகிறார், மேலும் தனது குடும்பம், சமூகம், நாடு மற்றும் முழு உலகத்தையும் மேம்படுத்துகிறார்.
The learned will long (for more learning), when they observe that while it gives pleasure to themselves or benefits them , the world also derives pleasure from it or benefits. An educated person improves themselves, also their family, community, country and whold world.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. Kural-400
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) எல்லாம் செல்வமே அல்ல.
Education or Learning is the true indestructible or imperishable wealth one can have. Other than education (other material things or assets) are not real assets or wealth.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். Kural-403
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
If you do not know it is fine. Keep your mouth shut and listen to knowledgeable person.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட் ட திரு. Kural-408
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வம், கற்றறிந்த நல்லவரிடம் நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது. முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம் எல்லோருக்கும் துன்பத்தைத் தரும்.
The riches of the unlearned are worse than the poverty of the learned (good persons). Wealth accumulated by fools brings misery to all.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. Kural-409
சமூக அமைப்பில் உயர்ந்த குடியில் பிறந்த கல்லாதவர், தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
An uneducated person born in a higher social class is not as great as an educated person born in a lower class.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. Kural-411
செல்வங்களில் சிறந்த செல்வம் செவிச் செல்வம் (கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வம்). அச்செவிச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
Wealth (gained) by the ear is the best of all types of wealth. Listening to great messages and knowledge, is the best way understand world around.
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். Kural-412
கேட்பது குறையும் பொழுது வயிற்றுக்கு உணவு சிறிதாவது கொடுக்கப்பட வேண்டும் . இது நல்ல பேச்சுக்கள் மற்றும் செய்திகளைக் கேட்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
When there is no food for the ear, give a little also to the stomach. This brings out importance of listening to good talks and messages.
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. Kural-414
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும். அப்படிக் கேட்பது நெருக்கடி வரும்போது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போல ஏற்ற துணையாக உதவும்.
Even if you do not learn or read books, you should listen and learn from the learned people. It will be like a staff in adversity. (like a crutch to help a cripple in times of crisis)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. Kural-423
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
The mark of wisdom is to discern the truth from whatever source it is heard. Donot take things blindly. Find the underlying truth. (analyze and accept)
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. Kural-426
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று அறிந்து அதற்க்கு ஏற்றார்ப் போல் உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
Knowing how the great (good) people of the world live and adapting to it and live in a way that is compatible with the world. Living in harmony is the wise way to live well.As moves the world so move the wise In tune with changing times and ways.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். Kural-427
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார். அறிவு இல்லாதவர்கள் அதனை நிகழப்போவதை முன்னே அறிய முடியாதவர். ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென சிந்திப்பார்கள்
The wise are those who know beforehand what will happen in the future. Others without knowledge cannot foresee it happening. The wise think about an effect for action or event.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். Kural-430
அறிவு உள்ளவர்கள் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உள்ளவர்கள். எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
Those who possess wisdom, possess every thing, even if they do not possess other things. Those who have not wisdom, whatever they may possess, have nothing (just misfits).
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். Kural-702
ஐயம் இல்லாமல் அடுத்தவர் மனத்தில் உள்ளதை உணரவல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
One who who is able to ascertain without a doubt what is within other's mind, is to be esteemed to be a god. (Predicting what others think or feel about a certain topic or situation, is a rare or super human skill)
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். Kural-834
புரிந்துக் கொள்ளும் அளவிற்கு படித்து நன்கு உணர்ந்து பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அதன்படி நடக்காத பேதையைப் போல் வேறு பேதையர் இல்லை.
There are no greater fools than one who has read and understood (a great deal) and even taught it to others, but does not follow or live according to his/her own teaching.
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. Kural-846
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , ஆடையால் தம் உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
It is also ignorant to consider covering oneself with clothes when one knows and does not remove one's guilt.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். Kural-33
ஏற்கும் வகையில் இருப்பதே அறச் செயல். இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைச் செய்ய வேண்டும்.
Always Perform good deeds as much as possible, in every way, and everywhere!
As much incessantly practise virtue
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற. Kural-34
மனம் தூய்மையாக (குற்றம் இல்லாத) இருப்பதே அறம். அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.
In spotless mind virtue is found. (pure and with out mistakes). all other acts of virtue are vain show. Be pure in mind That is Dharma
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். Kural-35
பொறாமை, அளவற்ற ஆசை, கடுங் கோபம், வன்மையான வார்த்தை (புண்படுத்தும் சொல்) ஆகிய இந்த நான்கு குற்றங்களும் இல்லாமல் இருப்பதே அறம்.
Virtue is to be free from these these four things: envy, inordinate desire (Lust), violent anger, and harsh words (hurting others or evil speech).
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். Kural-111
தகுதி என்ற ஒன்று பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரித்துப் பார்க்காமல் எல்லாரிடமும் ஒன்றாக பழகும் தன்மை. நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
Unbiased, Open mind, no prior biased opinion. Equity which consists in acting with equal regard to each of (the three) divisions of people [enemies, strangers and friends]. Equity is supreme virtue It is to give each man his due.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. Kural-118
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை. ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாகும்.
Wise (Judge) should be impartial, with out favoring neither side, like the weighing scale. This impartiality will be like an ornament of the wiseLike balance holding equal scales A well poised mind is jewel of the wise.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். Kural-202
தீயசெயல்கள் தீமையை உண்டாக்குவதால், தீயச் செயல்கள் நெருப்பை விட அஞ்சப்படும். அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
Because evil produces evil with out doubt, one should fear about doing evil, more than fire. Avoid doing evil to others.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று. Kural-208
தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்.
Evil dogs you close on your heels like a shadow (p) Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. Kural-281
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று நினைத்தால், ஏமாற்றாமல் திருடாமல் வாழ வேண்டும். களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.
He who wants to command respect must guard his mind against robbing others (p) Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். Kural-283
மோசடி செய்து சம்பாதித்த சொத்து (திருட்டு சொத்து), அதிகரிப்பது போல் தோன்றினாலும், முற்றிலும் அழிந்துவிடும். எல்லாம், வந்தது போல விரைந்து ஒழிந்தும் போய்விடும்.
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. Kural-290
களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.
Their very bodies fail the defrauding The world of the gods fail not the upright (p) Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். Kural-291
'வாய்மை' என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.
What is truth but unsullied utterance? (p) Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. Kural-299
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
All lights are for external illumination; For the wise, Only the light of truth illuminates the mind removing mental ignorance/darkness.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. Kural-354
மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ளபோதிலும் பயன் யாதும் இல்லை.
What profits one’s perfect senses if one is not endowed with true knowledge (p) Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. Kural-355
எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அப் பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.
(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that thing is the true thing.
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். Kural-360
காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக்கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால் பிறவித் துன்பமும் கெடும்.
Wipe out the very names of lust, anger and delusion; you will be wiping out the pause of re-birth (p) If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them).
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு? Kural-436
தன் குற்றத்தையும் வராமல் நீக்கிக் கொண்டு, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்?
What fault will befall a King who is free from guilt and detects guilt in others? (p) What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. Kural-652
புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக்காலத்திலும், ஒருவன் செய்யாமல் நீக்கிவிட வேண்டும்.
That deed must always be discarded which does not promote virtue and produce fame (p) Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. Kural-656
பழிகளைச் செய்து அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும்.
Better the poverty adopted by the great than the wealth resulting from sin (p) Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். Kural-727
பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப்போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.
The learning of one afraid of an assembly is like the shining sword in the hands of an eunuch in a battle-field (p) The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். Kural-729
தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள், கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.
The learned who are afraid of a good assembly will be regarded as worse than the illiterate (p) They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. Kural-963
உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.
During prosperity practise humility Even in adversity keep dignity (p) In great prosperity humility is becoming; dignity, in great adversity.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. Kural-964
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப்போல இழிவு அடைவார்கள்.
Men fallen from a high estate are like the hair fallen from the head (p) They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். Kural-969
தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.
He whose honour is at stake lays down his life like the Yak that is shorn of its single hair (p) Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். Kural-1076
கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக்கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்.
The base are like the drum for they noise abroad the secrets of men (p) The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். Kural-1079
பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ் மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர் மேல் வடு உண்டாக்கவும் முயல்வான்.
The base envy others in their food and clothing and slander them (p) The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. Kural-103
பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்.
Help done expecting no return, if weighed will be vaster than the sea (p) If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. Kural-108
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது.
The good remember with gratitude, all through seven births, the friendship of those who have wiped out their suffering (p) (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. Kural-110
எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.
There is salvation to those guilty of any other sin; but there is no redemption for the sin of ingratitude (p) He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. Kural-151
தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும்.
The earth sustains even those who dig into her To bear with those who slander us is the crown of virtue (p) To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. Kural-152
அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்.
Put up always with one’s transgressions Far greater than one’s forbearance is one’s oblivion of them (p) Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். Kural-156
தீங்கு செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்வரை புகழ் உண்டு.
The delight of the avenger is for a day The joy of the forbearing lasts till the end of the earth (p) The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். Kural-92
முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவ னானால் அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளைவிட நல்லதாகும்.
To speak with a pleasant look is better than to give with a cheerful heart 31 (p) Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. Kural-95
பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா.
Humility and loving words are only true ornaments Others are not (p) Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. Kural-100
இனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே!
Indulging in offensive words and avoiding sweet ones is like prefering the raw to a ripe fruit (p) To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். Kural-131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.
Right conduct exalts one So it should be prized above one’s life (p) Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். Kural-133
ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.
Right conduct ennobles one’s family Bad conduct makes one sink in the scale (p) Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் Kural-140
உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.
Those who cannot move in harmony with the world are learned fools (p) Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். Kural-183
பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலைவிட, இறந்துபோதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
Prefer death to a life of slander; for one finds in it the fruit of one’s virtue (p) Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். Kural-186
பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.
Ye scandal-mongers, beware of your being scandalized (p) The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. Kural-197
நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாம லிருத்தல் நல்லது.
Let great men speak untruth; it is better they refrain from uttering useless words (p) Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். Kural-200
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்.
Speak profitable words; avoid nonsense (p) Speak what is useful, and speak not useless words.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். Kural-643
கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.
The minister must use such words as have the effect of strengthening the approval of those who agree and differ (p) The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. Kural-645
தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்தபின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும்.
Speak out what you have to say only after knowing that your own argument will not be turned against you (p) Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. Kural-647
சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது, எவருக்குமே அருமையாகும்.
A clever speaker is neither tired nor fearful; none can defeat him in a debate (p) It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. Kural-686
கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல் சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன்.
The envoy must be learned, fearless, persuasive and expedient (p) He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. Kural-687
தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற் கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன்.
The best envoy states his case convincingly knowing his duty at the proper time and place (p) He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes) , seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? Kural-301
தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக்காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன?
He who restrains his wrath where it can be vented shows real restraint What does it matter whether one restrains it or not in an unavailing hour? (p) He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not?
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. Kural-304
முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?
Is there any enemy other than anger that kills both joy and pleasure? (p) Is there a greater enemy than anger, which kills both laughter and joy?
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். Kural-305
ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் ஏழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச்சினமானது அவனையே முடிவில் கொன்றுவிடும்.
If a man were to guard himself let him restrain anger Otherwise anger gets the better of him (p) If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். Kural-854
மாறுபாடு' என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.
It is the joy of joys to bury hatred, the evil of all evils (p) If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். Kural-857
இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதிநூற்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.
Those who nourish hatred will never see the triumphant light of truth (p) Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். Kural-926
உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்.
To be asleep is to be dead To drink wine is to drink poison (p) They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். Kural-927
கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர்.
A drunkard who has lost his senses becomes an object of ridicule to his sober neighbours (p) Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். Kural-934
தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப்போல் வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.
Nothing brings on poverty more than gambling It ruins one’s fame and is the mother of all evils (p) There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். Kural-939
சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே,அவனை அடையாமற் போய்விடும்.
A king whose hobby is gambling has neither raiment nor food, nor wealth nor renown nor learning (p) The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். Kural-996
பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உள்தானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லை யானால்,அது மண்ணினுட்புகுந்து மாய்ந்து விடும்.
The world is built on the wisdom of the noble and the good; but for them the entire world would be a heap of ruins (p) The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. Kural-1000
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல்போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.
Of what' use is the wealth of the discourteous? It is like good milk spoilt by an unclean vessel (p) The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. Kural-1014
நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும்; அந்த நாணம் என்னும் ஆபரணம் இல்லையானால், அவரது பெருமித நடை கண்டவர்க்கு நோயாகிவிடும்.
Disgraceful is the painted pomp of the life of the immodest (p) Is not the modesty ornament of the noble? Without it, their haughtiness would be a pain (to others).
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். Kural-621
துன்பங்கள் வரும்போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனைவிடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
Laugh over your obstacles; nothing like it to push them further and further (p) If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். Kural-626
பொருள்அடைந்தோம் என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் 'பொருளை இழந்தோம் என்று துன்பம் அடைவாரோ?
Will those who do not during prosperity exultingly say “we are rich”, cry out (during adversity) “Oh, we are destitute”? (p) Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity) , give not way to (undue desire) to keep their wealth.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். Kural-629
இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடையமாட்டான்.
He who does seek for pleasure in pleasure will not be vexed in sorrow (p) He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. Kural-630
துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான்.
One who regards trouble as pleasure will gain the elevation which his enemies desire (for themselves) (p) The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. Kural-43
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.
It is the supreme virtue (of the householder) to fulfil his obligations to forefathers, gods, guests, relatives and himself (p) The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. Kural-45
கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப் படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும்.
The life of householder marked by love and rectitude is itself virtue and its fruit (p) If the married life possess love and virtue, these will be both its duty and reward.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். Kural-50
உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப் படுவான்.
He who lives the true life of the householder on earth becomes one among the gods in Heaven (p) He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். Kural-56
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.
She is the woman who shields herself, serves her wedded lord, maintains her glory and never ceases from her toil (p) She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. Kural-60
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட் பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.
The grace of a home is her virtue Her blessed children are its adornment (p) The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். Kural-63
'தம் பொருள்' என்று போற்றுவதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப் பயனால் வந்தடையும்.
A man’s riches are his children; their riches are the fruit of their actions (p) Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். Kural-66
தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, 'குழலிசை இனியது', 'யாழிசை இனியது' என்று புகழ்ந்து கூறுவார்கள்.
The ‘lute is sweet’, ‘the Veena is sweet’, they say who have not heard the lisp of their little ones (p) The pipe is sweet, the lute is sweet, say those who have not heard the prattle of their own children.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே, முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.
The good a father can do his son is to make him occupy the first rank in an assembly (p) The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.
ஈன்ற பொழுதின் பெரிதவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். Kural-69
தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.
A mother’s joy to hear of her son’s greatness transcends that at his birth (p) The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல். Kural-70
மகன், தந்தைக்குச் செய்யும் உதவி 'இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ' என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.
The service a son can do his father is to make the public exclaim ‘see, the fruit of his father’s good deeds (p) (So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. Kural-148
பிறன் மனைவியை இச்சித்துப்பார்க்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.
The heroic manhood that does not lust after another’s wife is to the wise not mere virtue but the very law of their being (p) That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். Kural-279
நேரானாலும் அம்பு கொடுமை செய்வது; வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது; மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.
The arrow, though straight is deadly; the yāl though crooked is sweet Let people be judged by their actions (p) As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். Kural-280
உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும்; உயர்வுகருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்.
If persons abstain from deeds condemned by the world there is no need either for tonsure or for matted locks (p) There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். Kural-906
தம் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம்பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே.
Those who are under the spell of their bamboo-shouldered bewitching wives cease to be men even though they are like Gods on earth (p) They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. Kural-919
உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள் அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.
The soft shoulders of women who deck themselves for attraction are the hell into which undiscerning fools sink (p) The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். Kural-952
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒருபோதுமே தவறமாட்டார்கள்.
Men of noble descent never forsake good conduct, truthfulness and modesty (p) The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty. *Modesty is the quality or state of being unassuming in the estimation of one's abilities.
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. Kural-953
எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம்.
A cheerful countenance, charity, soft words and sweet learning all these characterise men of noble birth (p) A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. Kural-444
தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்துவருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும்.
To follow in the footsteps of those that are greater than oneself is the crown of one’s strength (p) So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். Kural-445
தகுதியான வழிகளை ஆராய்ந்துசொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
Verily the ministers are the eyes of the monarch; let the monarch have tried ones (p) As a king must use his ministers as eyes (in managing his kingdom) , let him well examine their character and qualifications before he engages them.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். Kural-448
கடிந்து அறிவுரை சொல்லித் திருத்துபவர் (பெரியோரின் துணை) இல்லாத பாதுகாப்பற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.தானாகவே கெடுவான்.
The King who is not guarded by men of firm counsel will perish even though he has no enemies (p) The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். Kural-455
மனம் தூய்மை யாதலும், செய்யும் தொழில் தூய்மை யாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும்.
Purity of mind and purity of action are of a piece with the purity of one’s associates (p) Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். Kural-460
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தைவிட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை.
There is no greater evil than the company of the wicked (p) There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. Kural-783
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவதுபோல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும்.
Even as good literature enraptures its reader the attachment of good men increases a king’s happiness (p) Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். Kural-785
நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்துபேசிப் பழகுதல் வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும்.
Friendship is not cultivated by mere acquaintance It is the harmony that cements the bond of friendship (p) Living together and holding frequent intercourse are not necessary (for friendship) ; (mutual) understanding can alone create a claim for it.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. Kural-788
பொது இடத்தில் (ஆற்று வெள்ளத்தில்) பலர் முன்னே ஆடை நழுவும்போது மானத்தை மறைக்க, கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவது தான் நல்ல நட்பு
Friend rushes (immediately) to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment falls and exposes (before an assembly). (p) (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. Kural-793
ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும்.
Make friends with one after knowing one’s character, ancestry, defects and one’s great associates (p) Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. Kural-798
உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
Refrain from doing things which make your heart shrink Likewise avoid friends who desert you in adversity (p) Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். Kural-802
நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும்; அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை.
The soul of friendship is perfect freedom To be of cheer in friendly interference is the duty of the wise (p) The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். Kural-810
பழைமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்துகொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப் படுவார்கள்.
Even foes long for those who do not forsake their old and erring friends (p) Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends.
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். Kural-816
பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும், அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும். அறிவில்லாதவனுடைய நட்பை விட அறிவுடையவர்களின் பகைமை நன்மை தரும்
Very much more valuable is the hatred of the wise than the doting friendship of fools (p) The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். Kural-818
நம்மாலே செய்து முடிக்கக்கூடிய செயலையும் செய்ய விடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிடவேண்டும்.
Abandon without fuss friends who make a possible thing impossible (p) Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. Kural-820
வீட்டிலுள்ளபோது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப்பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும், நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.
Avoid the friendship however little, of those who befriend you at home but betray you in the assembly (public) (p) Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. Kural-825
மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை, எந்த ஒருவகையாலும், அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்துகொள்ளக் கூடாது.
It is impossible to convince those whose minds do not agree (p) In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். Kural-826
நம்மிடம் பேசும்போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுகளைச் சொன்னாலும், நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்துவிடலாம்.
Of what avail are the friendly words of your foe? (p) Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. Kural-72
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.
The loveless are full of themselves but the loving lay down their lives for others (p) Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love cons ider even their bones to belong to others.
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. Kural-74
அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.
Out of love springs kindness It in turn grows into inestimable prize of friendship (p) Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. Kural-78
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலைநிலத்திலேகாய்ந்தமரம் தளிர்த்தாற்போல நிலையற்றதாம்.
To live a life void of love is like a withered tree bursting into leaf in a barren land (p) The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. Kural-80
உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்.
That body where love dwells is the seat of life; all others are but skin-clad bones (p) That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். Kural-84
முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்
Fortune smiles on the house of one who entertains with cheerful face worthy guests (p) Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். Kural-85
விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ?
Courtesy or good manners to feed guests first and eat the remaining. Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ? (p) Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain?
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். Kural-87
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும்.
The effects of hospitality cannot be exactly measured They are proportionate to the worth of the guest (p) The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. Kural-89
பொருள் உடைமையுள்ளும் இல்லாமை' என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும்.
To be poor amidst plenty is to despise hospitality Such folly is only of the ignorant (p) That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. Kural-212
தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம், தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.
All the wealth one earns is for rendering help to the deserving (p) All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. Kural-215
ஊர் குளம் நீரால் நிறைந்து பயன் தருவதைப்போலவே உலகத்திற்கு உயர் ஞானம் பெற்றவர்களின் உயர்வு உள்ளது. பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank. (p) The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். Kural-216
பயன் தரும் மரம் இருக்கும் ஊரில் பழுத்து பயன் தருவதைப் போன்றே செல்வம் நல்ல அறிவு உள்ளவருக்கு கிடைப்பது பலருக்கும் பயன் தருவதாகும்.
If wealth be in the possession of a person who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease. (p) The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். Kural-217
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போல எப்போதும் பயன் தரும்.
The wealth of a wide hearted soul is like a herbal tree that healeth all (all parts of the tree is useful to every one, including animals). (p) If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence) , it is like a tree which as a medicine is an infallible cure for disease.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. Kural-221
வறுமையானவர்க்கு (தேவைப்படுபவர்க்கு) ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை; பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.
Gift to the poor alone is true charity Everything else is of the nature of a barter (p) To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. Kural-226
எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும்.
Let the rich appease the devouring hunger of the indigent poor It is a charity rendered unto themselves (p) The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. Kural-227
பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் 'பசி' என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.
The pest of hunger never touches one who shares one’s food with the poor (p) The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். Kural-228
தாம் சேர்த்துள்ள செல்வத்தைக்காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?
The callous rich hide their barren metal; perhaps they know not the joy of giving (p) Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving?
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். Kural-229
தாம் முயன்று தேடி நிரப்பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலைவிடத் துன்பம் தருவதாகும்.
More squalid than begging is a life of self-indulgence (p) Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. Kural-241
அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே!
The crown of wealth is one’s compassion; all other wealth is found even among meanest of men (p) The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. Kural-247
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
As this world is not for those who are without wealth, so next world (heaven?) is not for those who are without kindness.
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. Kural-250
தன்னைவிட மெலிவானவர்மேல் பகைத்துச் செல்லும்போது, தன்னைவிட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும்.
Oppress not the weak; remember your fate in stronger hands (p) When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். Kural-256
புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உயிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள்.
Would there be meat for sale, if men were not to kill animals for eating flesh? (p) If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். Kural-314
துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே. அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
Doing good for someone who harmed you, put them to shame, which is the biggest punishment. Enemy can become a good firend in future (no permanent friend or enemy). Atleast you can move on with out excessive mental load. (p) The (proper) punishment to those who have done evil (to you) , is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். Kural-316
துன்பம் தருவன எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
Avoid all that causes pain to others (p) Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. Kural-317
எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன் பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு ஆகும்.
It is the supremest virtue not to commit at any time even slight injury to others (p) It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். Kural-319
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
Action – Reaction are unseparble pair (two sides of coing, exist in pair). Popularised by Newton as law of physics. (p) If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.
Karma - spiritual principle of cause and effect where intent and actions of an individual (cause) influence this birth or the future births of that individual (effect). Valluvar seems to believe that bad actions will result in suffering and good actions will result in happiness.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. Kural-322
உணவை பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது.
All the scriptures emphasise the virtue of hospitality and the creed of nonviolence (p) The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. Kural-323
ஒப்பற்ற நல்லறம் என்பது எந்தவுயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.
The crown of all virtues is non-violence Next comes non-lying (p) Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. Kural-327
தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும்கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யது.
Do not commit any act of violence though your life is in peril (p) Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். Kural-573
பொருளோடு பாடல் பொருந்த வில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அதுபோலவே, கண்ணோட்டத் தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை.
What is the use of a song that could not be enjoyed? Likewise, what is the use of the eyes that have no kindliness? (p) Of what avail is a song if it be inconsistent with harmony? what is the use of eyes which possess no kindliness.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் Kural-575
கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது 'புண்' என்றே சான்றோரால் கருதப்படும்.
Kindliness is the fitting ornament for the eyes They are a sore, where it is absent (p) Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். Kural-580
விரும்பத் தகுந்த 'கண்ணோட்டம்' என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள். பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்.
Those who wish to acquire loveable urbanity will knowingly swallow even the poison served (p) Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. Kural-1025
குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன்குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.
The world becomes kin to one who leads an unblemished householder’s life (p) People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். Kural-1026
ஒருவனுடைய நல்லாண்மை' என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.
What is true manliness except perfect ordering of the house for its own glory? (p) A man's true manliness consists in making himself the head and benefactor of his family.
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. Kural-1030
துன்பம் வரும்போது, அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம்புகுந்ததனால் வீழ்கின்ற மரம்போலத் தானும் வீழ்ந்து படும்.
The axe of adversity falls on the family which has no noble son to shield it (p) If there are none to prop up and maintain a family (in distress) , it will fall at the stroke of the axe of misfortune.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. Kural-381
படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்கம் ஆவான்.
He is a lion among kings, who possesses with an army, a territory, wealth, ministers, allies and a fortress (p) He who possesses these six things, military, people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. Kural-383
நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்.
The ruler of the earth must never be bereft of his sleepless watchfulness (alertness), learning and courage (p) These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. Kural-384
அரச நெறியிலிருந்து வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டைவிட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.
He is an honourable King who swerves not from virtue and abstains from vice (p) He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். Kural-388
முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம்மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.
He is a God among men who shields his subjects (p) That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. Kural-390
கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடி காத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.
He is a light among Kings who is endowed with liberality, grace, love for his subjects, and a desire for just rule (p) He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. Kural-523
சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடை ய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.
The life of one with no kin will be like overflowing waters of a tank with no bund (p) The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். Kural-525
சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின்,அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.
One delights in the company of one generous of heart and suave of speech (p) He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல். Kural-530
காரணம் இல்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து, பின்ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதனைச்| செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.
Let the king embrace his estranged kith and kin by redressing their grievances (p) When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். Kural-543
அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாக நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோன்மையே ஆகும்.
The king’s sceptre is the standing proof of Brahminical books and their teachings (p) The sceptre of the king is the firm support of the (sages writings) Vedas of the Brahmin, and of all virtues therein described.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். Kural-549
குடிகளைப் பகைவரிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை; அதுவே அவன் தொழில்.
To punish crime is the duty, not the fault of the king who attends to the welfare of his subjects (p) In guarding his subjects (against injury from others) , and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. Kural-551
குடிகளை வருந்தச்செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான்.
The unrighteous king who oppresses his subjects is more cruel than the one who leads the life of a murderer (p) The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. Kural-552
அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், 'எல்லாவற்றையும் தந்துவிடு என்று கேட்பதைப் போன்றதாகும்.
The wielder of the sceptre asking for gifts, is like the spearman asking the wayfarer ‘give ’ (p) The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். Kural-558
முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும்.
Where people possess a king, who does not enforce justice, wealth does not confer more happiness than poverty (p) Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. Kural-561
ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.
A righteous king investigates and fittingly punishes the wrongdoer so that he may not repeat it (p) He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice) , suitably punishes it, so that it may not be again committed.
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். Kural-566
கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும்.
The abundant wealth of a king who utters harsh words and puts on unkind looks will not last long (p) The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். Kural-582
எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.
A king’s duty is to get day to day knowledge of everything that happens (p) It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. Kural-584
அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய கற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப் படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.
Espionage consists of watching all people, to wit, the king’s employees, his relations and his enemies (p) He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். Kural-588
ஓர் ஒற்றன் அறிந்துவந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.
One must get confirmed the information supplied by one spy, by that of another (p) Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. Kural-631
ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையும், நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன்.
He is the minister who, finds out the (right) means, the time, the deed and its full accomplishment (p) The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. Kural-633
பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன்.
A minister must be able to separate a foe from his ally, befriend allies and reunite separated allies (p) The minister is one who can effect discord (among foes) , maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. Kural-672
காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்யவேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
Delay such things as call for delay But never delay that which cannot be delayed (p) Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். Kural-673
செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே; செய்ய இயலாதபோது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்தபின்பே செய்தல் வேண்டும்.
Achieve a thing wherever possible; if it were not possible adopt a cautious policy (p) Whenever it is possible to overcome your enemy the act {of fighting) is certainly good; if not, endeavour to employ some more ‘successful method.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். Kural-675
வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.
Do a thing after carefully deliberating on five things; resources, means, the time, the nature of the deed, and the place (p) Do an act alter a due consideration of the {following} five, viz., Money, means, time, execution and place.
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். Kural-692
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
When accompanying Kings or bosses or rich, should not desire things desired by their kings will yield them everlasting wealth. Do not mimic the rich and desire things like rich. Live as per your position and status. (p) For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். Kural-696
அரசனது உள்ளக் குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும்.
Watch the mood of the monarch Talk to him pleasantly and inoffensively (p) Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. Kural-734
நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்.
That is a kingdom where excessive hunger, incurable diseases and destructive enemies are absent (p) A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. Kural-738
மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளை பொருள்பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்லகாவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு!
Five are the ornaments of a kingdom - absence of disease, wealth, fertility, happiness and security (p) Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects) ; these five, the learned, say, are the ornaments of a kingdom.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. Kural-740
மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சிநடத்தும் இவேந்தன் பொருத்தமில்லாமல் இருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும்.
Vain is the kingdom which may have all the excellence except harmony between the ruler and the ruled (p) Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். Kural-748
வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்துநின்ற படியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண்.
The inmates of a good fortress can defend themselves even when besieged on all sides (p) That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். Kural-750
எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும் அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்துபோகும்.
Of what use are these barriers of defence to a stronghold if it possesses no men of valour (p) Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். Kural-770
நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்.
Of what avail is the army of heroic warriors if there be no general to guide them? (p) Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. Kural-780
தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும்.
Ye! Soldiers, endeavour to earn a death of glory which will move your chief to tears (p) If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. Kural-863
அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.
He who is cowardly, ignorant, restless and niggardly, falls an easy prey to his enemy (p) In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. Kural-864
நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன்மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.
He who does not abstain from anger (not mentally strong) and has insufficient resources can be attacked by any one at any time (p) He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. Kural-879
களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்துவிடுக; முதிர்ந்தபின் அதைக் களை தலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும்.
Nip the thorn in the bud lest it should hurt the hands of those who seek to cut it when hardened into a tree (p) A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. Kural-886
தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.
If kinsmen were to play to the traitor it would be difficult to escape death (p) If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. Kural-898
குன்று போலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெடவேண்டும் என்று நினைப்பார்களானால், தம் குடியோடு நிலைபெற்றார் போன்ற பெருஞ்செல்வரும், மாய்வார்கள்.
The fury of the sages like the lofty hills destroys the great race of pure men of stable fortune (p) If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். Kural-972
எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒருபோதும் ஒத்திருப்பதில்லை.
It is not birth but deeds that mark men (p) All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். Kural-975
பெருமை உடையவர்கள், தாம் வறுமையானபோதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்துமுடிக்கும் வலிமை கொண்டவராவார்.
Greatness achieves things difficult for others (p) (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். Kural-979
பெருமை குணம் ஆவது, காரணம் உள்ளபோதும் தருக்கின்றி அமைந்திருத்தல்: சிறுமைக்குணமாவது பெருமை அற்றபோதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.
Greatness is not conscious of its worth Littleness is rooted in pride (p) Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. Kural-236
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதைவிடத் தோன்றாமற்போவதே நல்லது.
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும். இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
If you do any job, do it well and become famous. Otherwise, it is good not to do the job at all. (Nothing is better than nonsense). If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born. (p) If you are born (in this world) , be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். Kural-461
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக் கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்னரே செய்ய வேண்டும்.
After much deliberation over profit and loss and the final gains, launch on a task (p) Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் Kural-462
தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக்கூடியது யாதொன்றுமே இல்லை.
Nothing is impossible for those who act after listening to the counsel of persons of known probity (p) There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. Kural-467
நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; 'துணிந்த பின்னர் எண்ணுவோம்' என்று எதையும் நினைப்பது குற்றமாகும்.
Begin your task after much deliberation To think after launching action is to court a grievous blunder (p) Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. Kural-469
அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மைசெய்வதிலும்கூடக் குற்றம் உண்டாகிவிடும்.
Even a good scheme falls through if we do not divine aright the disposition of men (p) There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். Kural-472
தன்னாலே முடிய கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச் செயலிலேயே நிலைத்துநின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.
Nothing is impossible for them who know the nature of their task and throw themselves heart and soul into it (p) There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy) , make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். Kural-475
மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்க முரிந்து கெடும். அதிக ஏற்றுதல், ஒரு நபருக்கு அதிக வேலை, பலவீனமான இணைப்பு.
Just because a peacock feathers is light or almost weightless, if you load too much on a cart, the axle will break. similarly, However strong a person can be, there is a limit. Too many small assignments can lead to his failure to do any work. How powerful a king is, if he accumulates too much small enemies, it's a danger for him. Also applies to organization, if overstretches, it will crash. The axle of a big cart will break loaded only with light peacocks' feathers, if it is greatly overloaded.over loading, too much work for one person, weakest link. (p) The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
ஆகுஆறு அளவு இட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக்கடை Kural-478
வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. செலவு வருமானத்தை விட அதிகமாக இல்லாவிட்டால்.
Even if income is small, Expenditure should be less than income. Low income is not an
exccuse for debt. (ஆகு ஆறு = Income, போகு ஆறு = Expenditure) (p) Even though the income (of a king) be small, it will not cause his (ruin) , if his outgoings be not larger than his income.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. Kural-481
தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.
During the day the crow conquers the owl So the monarch who wishes to defeat the enemy must choose the proper time (p) A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். Kural-483-
ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?
Is there anything impossible if one acts at the right time and with the proper equipment? (p) Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time?
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். Kural-493-
தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பர்.
Even the weak are able to win if they choose the right place to assail the foe (p) Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action) , and guard themselves, while they make war on their enemies.
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். Kural-498-
சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்.
Ruined will be the strength of one who takes a large army to a place where the enemy of small forces is entrenched (p) The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். Kural-505-
ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.
One’s own deed is the touchstone of one’s greatness and littleness (p) A man's deeds are the touchstone of his greatness and littleness.
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். Kural-509-
ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்.
Let men be chosen with deliberate care; when once the choice is made, let no suspicions crump into your soul (p) Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். Kural-511-
ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
After examining the good and the bad, cling to the good (p) He should be employed (by a king) , whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. Kural-513-
அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந் நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.
Choose men, who are endowed with love, wisdom, clever vision and freedom from covetousness (p) Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். Kural-514-
எல்லாவகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்.
Position corrupts even the men of our own deliberate choice (p) Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். Kural-517-
இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.
Let the king be first convinced of the competency of a person; then he shall allow him to move freely in the sphere of his appointed task (p) After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். Kural-518-
இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.
Choose men of approved merit and then make them worthy of the station (p) Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. Kural-534-
அச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை.
Of what avail is a citadel to a crown, what good availeth the thoughtless (p) Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded) , so the thoughtless has no good (whatever advantages he may possess).
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். Kural-537-
மறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன் என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்.
Nothing is impossible for the thoughtful (p) There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.
ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். Kural-593
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள்.
Those who possess constant exertion will not grieve over the loss of their wealth (p) They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. Kural-595-
நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.
The length of a watery plant is determined by the depth of the water Likewise the greatness of a person is proportionate to the strength of his will power (p) The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். Kural-599-
பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, மனவூக்கமுள்ள புலி தன்மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.
Even the huge elephant with sharp tusks dreads the attacking tiger (p) Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. Kural-600-
ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே! அந்த ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே!
One’s strength is one’s exertion Without it persons are only trees in the form of men (p) Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். Kural-601
ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட ஒளி மழுங்கி, முடிவில் அணைந்தும் போய்விடும்.
If sloth extends its darkness it will extinguish the lustrous lamp of one’s family (p) By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். Kural-605
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும்,தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.
Procrastination, carelessness, sluggardliness and sleep are the four boats fondly entered into by those who go to ruin (p) Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். Kural-614
ஊக்கம் இல்லாதவர் உதவுதல், வீரம் இல்லாதவர் (போருக்கு அஞ்சுகின்ற பேடியின்) கையில் இருக்கும் கத்தி போல் பயனற்றுப் போகும். சோம்பேறிகளுக்கு எவ்வளவு வளங்களைக் கொடுத்தாலும், உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
Benefits can come to one, who does not labour. They will fail, like a fearful person (who is full of fear) who has a sword in its hand to attack the enemy. You will get nothing, by giving any amount of resources to lazy person (waste of resources). (p) The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். Kural-616
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும். முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும்.
Sincere/hard work will produce wealth; Laziness/idleness will just bring poverty. (p) Labour will produce wealth; idleness will bring poverty.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. Kural-661
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகா.
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature. (p) Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. Kural-1031
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். Kural-1033-
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்பவர்கள். மற்றவர்கள் உழவர்களை தருவதை உண்டு, உழவர் பின்னே செல்பவர் ஆவர். உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்.
Those who live by agriculture (farmers) are leading independent free life, taking care of their basic needs. All others lead a dependent life, going behind farmers bowing and eating whatever farmers give them.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. Kural-1036-
உழவுத் தொழில் செய்யும் உன்னதமானவர்கள் கொடுக்க மறுத்தால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை. எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும் உயிர் வாழ்வதுற்கு உன்ன வேண்டும்.
Should ploughmen sit folding their hands doing nothing, even Desire-free monks will suffer or die of hunger. Even ascetics need to eat to survive.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. Kural-1038-
ஏர் செய்து அடுத்து களை நீக்கிய பின், எருவிட்டு விதைத்த பின் நீர்பய்ச்சி பயிரைக் காவல் செய்வது நல்லது.
Ploughing, Weeding, Manuring, Irrigating, and Watching/Protecting crops are all needed to produce crops/food.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். Kural-1040-
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைக் கண்டு நிலம் என்ற நிலமகள் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.
The Earth (maiden) will laugh at the sight of those who plead poverty, with out farming the land and leading an idle life. Laziness is their reason of poverty.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. Kural-941
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease. Eat in Moderation. Eat what suits you (individual)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. Kural-945
ஒவ்வொத உணவுகளை விலக்கி, உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவை அளவுடன் உண்டால், உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
With self control, eating agreeable foods (avoiding food that does not suit you), you will be free from diseases and can lead an healthy life.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து. Kural-950
நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், மருந்தைத் தயாரிப்பவர்/பயன்படுத்தும் அளவு சொல்பவர்/அருகிருந்து துணைபுரிபவர் என்று மருத்துவ முறை நான்கு வகைப்படும்.
Patient, doctor, medicine and Pharmacist/nurse who take care of patients are four-parts or components of health system (medical treatment).
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. Kural-372
இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்.
Fate makes fools of the wise Fate makes folly pass for wisdom (p) An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. Kural-374
ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்.
Fate has a double sway It makes the foolish rich and the wise poor (p) There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. Kural-375
செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவை யாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு.
Things favourable become adverse, and the unfavourable favourable (p) In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்? Kural-379
ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அஃது இல்லாத கேடு காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?
Why worry about pain and pleasure? They are all the workings of fate (p) How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate)?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். Kural-380
ஊழைக்காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!
What is there so potent as Fate? Even if we devise some way of counteracting it, it takes us by surprise (p) What is stronger than fate? If we think of an expedient (to avert it) , it will itself be with us before (the thought).
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. Kural-331
நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்.
It is contemptible folly to mistake the unstable for the stable (p) That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. Kural-332
பெரும்பொருள் வந்தடை தல் கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே.
The flow of fortune is like the gathering of a crowd at a concert; its ebb is like the melting of the crowd at its close (p) The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அகுப ஆங்கே செயல். Kural-333
நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதேசெய்யவேண்டும்.
Fortune is fickle; if you come by it delay not; put it to proper use (p) Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. Kural-337
அடுத்த பொழுதில் உயிர் வாழும் வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் மேல் அளவற்ற பலவாகும்.
One is not sure what awaits him the next moment; but he becomes a prey to a thousand and one thoughts (p) Innumerable are the thoughts which occupy the mind of (the unwise) , who know not that they shall live another moment.
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. Kural-338
தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு.
The attachment of life to the body is like that of a full-fledged bird flying from its broken shell (p) The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. Kural-339
ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப்போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு.
Death is like a slumber deep And birth like waking from that sleep. Death is like sleeping in the burial ground; birth is like waking in the morning. (p) Death is like sleep; birth is like awaking from it.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. Kural-340
உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்!
Why should the soul seek a temporary shelter in the perishable body? Is there not a durable habitation for it? (p) It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். Kural-121
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும் (தேவ வாழ்க்கை); அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும் (நரக வாழ்க்கை).
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell) (p) Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. Kural-161
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.
Let no one have envy; for freedom from envy must be one’s virtue (p) Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். Kural-171
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும். அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். Kural-751
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance. (p) Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. Kural-981
கட்டாயம் செய்யவேண்டிய கடன் என்பது நல்லவைகள். அத்தகைய கடனை அறிந்து செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good. (p) It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். Kural-1001
வீடு நிறையப் பொருளைச் சேர்த்துவைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் எதுப் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.
He who does not make use of his hoarded wealth is really dead, though aliye; for he cannot do anything great (p) He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. Kural-1003
மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை.
He who prefers mere accumulation of wealth to glory is a burden unto the earth (p) A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். Kural-1005
இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடிகோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.
Of what avail is the untold wealth of one who neither gives nor enjoys it? (p) Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. Kural-1008
வறியவாலே விரும்பி வாப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும்.
The wealth of a miser is like the fruit of a poison-tree in the heart of a village (p) The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. Kural-1041
ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப்போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை.
There is no greater evil than poverty! (p) There is nothing that afflicts (one) like poverty.
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். Kural-1044-
இழிவான சொல் பிறவாத குடும்பத்திடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.
Dejection due to poverty makes the noble utter the language of the base (p) Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். Kural-1045
வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் ள்ளாகவே உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.
Poverty in itself an evil is the mother of all ills (p) The misery of poverty brings in its train many (more) miseries.
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். Kural-1047
அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன் தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட,ஓர் அயலானைப்போலக் கருதிப் பார்க்கப் படுவான்.
Even a mother turns her back on one whose poverty is devoid of probity (p) He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. Kural-1051
தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை.
Beg if you meet people who can give If they refuse, it is their fault, not yours (p) If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். Kural-1052
ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும்.
Begging would be pleasant to one if one were to achieve one’s object without causing pain (p) Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. Kural-1057
தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு.
Mendicancy inwardly rejoices in the bounty of the generous free of scorn (p) Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. Kural-1060
இரப்பவன் ஒருபோதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்கவேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவாதது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்.
The needy should not scowl at "No" His need another's need must show. Do not chafe against the hunks for inevitable is the pain of poverty (p) He who begs ought not to be angry (at a refusal) ; for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing). * Saint valluvar talks of two kinds of Asking:-Asking help for public causes or enterprises. Begging when one is able to work and this is condemned.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். Kural-1063
வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப்போல, வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை.
There is no greater folly than the thought of wiping out poverty by beggary (p) There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில். Kural-1065
நெறியோடுகூடிய முயற்சியாலே கொண்டுவந்தது, தெளிந்த நீரைப்போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும் அதனை உண்பதைவிட இனியது வேறு யாதும் இல்லை.
Nothing is sweeter than the thin porridge earned by the sweat of one’s brow (p) Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். Kural-1066
வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு நீர் தருவீராக என்று இரந்தாலும், அதனைப்போல் நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை.
It is a heinous sin to beg for water even for a cow crying of thirst (p) There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். Kural-363
போதும் என்ற மனம். எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம். வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லை
Contentment: There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it. Heaven is where there is nothing to desire.
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. Kural-1122
உடம்பும் உயிரும் எப்படியோ அப்படியே பருவப் பெண்ணுக்கும் அவளை காதலிக்கும் ஆணுக்கும் உள்ள நட்பு. உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை
The love between lovers (man and his damsel) is like the union of body and soul. Is like bond between soul and body, which is unseparable. (p) The love between me and this damsel is like the union of body and soul.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். Kural-1148
நெய்யால் எரியும் நெருப்பை அடக்குவது எப்படியோ அப்படியே ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது அறியாமைச் செயலாகும்.
To say that one could extinguish love/lust/passion by rumour or scandals of the village is like extinguishing fire with ghee. (Difficult to hide feelings especially love and passion) (p) To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. Kural-1158-
துன்பமானது நம்மேல் அன்புடையார் (இசைவு ) இல்லாத ஊரில் வாழ்வது. அதனினும் துன்பாமனது இனிமையானவரின் (இனிய காதலரின்) பிரிவு.
Bitter is life in friendless place; Worse is parting friends or lovers.
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. Kural-1166
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.
The pleasure of love or lust is (as great as) the sea. But the pain of lust is far greater. Sadness is when you loose something you desire or when you do not get something you desire. Nostalgic memoirs may become Sad Memories?
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். Kural-1179-
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை. வந்தாலும் தூங்க முடிவதில்லை. அன்பால் இணைந்தவர் கண் தூங்குவது இல்லை (தூங்க முடியாத துன்பமா?)
When lovers are away, one can not sleep. But when one is with their loved ones, they had no time to sleep. So eyes endure unbearable agony of keeping awake.
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். Kural-1257
காதல் வெட்கத்தை/மானத்தை மறைத்து/ஓட்டிவிடும். நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால், நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
One will know nothing like shame when loved or do what is desired by beloved. Will excessive desire lead to shame, if not checked? Can this be expended to love of anything like material things etc.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. Kural-1081
இவ் வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது, கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண்தானோ! புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றதே!
Is this a goddess fair? Or is it a rare peacock? Or, is it a mortal with heavy earrings? My mind is perplexed in the extreme (p) Is this jewelled female a celestial, a choice peahen, or a human being? My mind is perplexed.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். Kural-1094
யான் தன்னைப் பாராதபோது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள் ; யான் பார்க்கும்பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலை கவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்!
She casts her shy look on earth when I gaze at her; but if I turn aside, she glances at me with a gentle smile (p) When I look, she looks down; when I do not, she looks and smiles gently.
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. Kural-1113
அவள் மேனியோ தளிர் வண்ணம்: பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்: மையுண்ட கண்கள் வேல் போன்றவை: தோள்களோ மூங்கில் போன்றவை!
Her body is of rich gold, her teeth pearls She is fragrant, her eyes dart forth glances like a lance, her shoulders gently curve as the bamboo O! what a varied charm my beloved has! (p) The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். Kural-1116
மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே!
Even the stars of heaven veer their usual courses mistaking my lady’s face for their queen moon (p) The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. Kural-1131
காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, 'மடலேறுதல் அல்லாமல், வேறு யாதும் இல்லை.
Men anguished by unrequited love find no stronger solace than mounting the madal (p) To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse. *Pangs of passion find no recourse Except riding *`palmyra horse'
* Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangsThe parents of the lovers first reproach them and then consent to their marriage.
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு Kural-1107
தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை, பகுத்து உண்பது போன்றது, அழகிய மாமை நிறம் உடைய இவளை தழுவுவது போன்றது
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings), sharing with every one (distributing a portion of it in charity). Work hard to enjoy (not inherit and spend)
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. Kural-1181
என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்!
I did not assent to my lover’s parting To whom can I now complain of the pallor of my body, stricken with separation? (p) I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. Kural-1196-
'காதல் ஒருதலையானது' என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது.
Bitter is unrequited love; sweet it is if returned in equal measure like the wellpoised even scales (p) Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. Kural-1201
நினைத்தாலே அளவற்ற பெருமகிழ்வை உண்டாக்குவதால் மதுவை காட்டிலும் காமம் இனிது. (துன்பம் இன்பத்தின் மறுபக்கம் இரண்டும் சேர்ந்தே வரும்)
Love is sweeter than wine. Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்
உற்றநாள் உள்ள உளேன். Kural-1206
காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?
Only the recollection of those ecstatic days with him makes me live What else can sustain me? (p) I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live?
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். Kural-1219
கனவிலே காதலரை வரக்காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள்.
Only those women who do not see their lovers in dreams, blame them for their cruelty in walking hours (p) They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். Kural-1230
பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப்பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே!
This life of mine which has survived this bitter separation is very near to death in this treacherous evening, as I think of my lord who values riches far above love (p) My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். Kural-1245
நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ?
‘O heart! can I really forsake him as cruel though he has used me cruelly when I clung to him ’ (p) O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். Kural-1252
காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது; அஃது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது.
Verily the thing called love has no grace; even at dead of night it rules my heart and keeps it awake when all the world is in slumber (p) Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. Kural-1269
தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒருநாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.
To one who awaits the day of arrival of her husband, one day appears as long as seven (p) To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. Kural-1278
நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர்: அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆகியவரைப்போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே!
It was only yesterday that my lover went, but I have acquired seven days’ pallor (p) It was but yesterday my lover departed (from me) ; and it is seven days since my complexion turned sallow.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. Kural-1286
என் காதலனைக் காணும்போது, அவர் போக்கிலே தவறான வற்றையே காணமாட்டேன் ; அவரைக் காணாதபோதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன்.
When I see my husband I cannot see his faults In his absence I cannot see anything else (p) When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். Kural-1302
உணவுப் பண்டங்களில்,அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல்; அதை அளவுகடந்து சிறிது நீள விட்டாலும்உப்பின் மிகுதிபோல அது கெட்டுவிடும்.
Reserve like a pinch of salt adds to enjoyment, If excessive, it spoils the taste (p) A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். Kural-1315
'இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்' என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவோம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள்.
When I said “We shall not separate in this life”, her eyes were full of tears meaning that I would separate from her in the next life (p) When I said I would never part from her in this life her eyes were filled with tears.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். -1330
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும். ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான். ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அதனினும் மிகுந்த இன்பமாகும்.
Dislike and quarrel adds delight to love. greater delight is the loving reunion. A hearty embrace (thereafter) will add more delight to dislike. (p) Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. Kural-22
பற்றுகளை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும்.
To measure the greatness of one who has renounced is like reckoning the number of the dead in this world (p) To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். Kural-26
செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவர் பெரியோர்; சிறியோர், செய்வதற்கு அரியவற்றைச் செய்யமாட்டாதவர் ஆவர்
The great achieve the impossible; the little cannot (p) The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். Kural-30
எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர்.
They are the Brahmans who are righteous and love all creation (p) The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. Kural-261
தமக்கு வந்த துன்பத்தைப் (நோய்) பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்.
The true form of penance is to put up with all pain and to abstain from injury (p) The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. Kural-262
தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே!
Penance is possible only for the disciplined Disgrace attends the undisciplined (p) Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth) ; it will be useless for those who have not done so, to attempt to practise them (now).
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். Kural-263
துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்?
In their ministering to the needs of the ascetic, verily the householders have become oblivious of their penance (p) It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity?
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். Kural-264
பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்.
Penance, if it wills can mar its foe, or bless its friend (p) If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். Kural-265
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்.
They persevere in penance; for through penance they achieve their desired goal (p) Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. Kural-267
கூடச்ட ஒளிவிடும் பொன்னேபோல், துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமை யானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்.
Gold shines all the more in fire; those who do penance become mellowed through suffering (p) Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். Kural-270
உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.
Many are the indigent; for only a few practise penance (p) Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். Kural-341
ஒருவன் எதிலிருந்து விலகி இருக்கின்றானோ, அவற்றினால் அவனுக்குத் துன்பம் வராது
நம்மிடம் பல விதமான பொருட்கள், சொத்துக்கள், உறவுகள், நம்பிக்கைகள் என்று எண்ணில் அடங்கா பட்டியல் இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கி இருக்க முடியுமோ, அவ்வளவு துன்பம் (நோதல்) இல்லை. தூக்கி எறியச் சொல்லவில்லை. நீங்கி இருக்கச் சொல்கிறார். (Keep distance even from closed ones)
From what from what a man is free | From that, from that his torments flee.
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. Kural-342
துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்டபின் இவ்வுலகில் அடையக் கூடிய இன்பம் பலவாகும்.
There is endless joy in early renunciation (p) After a man has renounced (all things) , there will still be many things in this world (which he may enjoy) ; if he should desire them, let him, while it is time abandon. (the world).
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. Kural-343
ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டுவிட வேண்டும்.
Subdue your senses and give up all your longings (p) Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். Kural-346
உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.
He enters the abode of the gods who lays the axe at ‘I’ and ‘mine ’ (p) He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. Kural-350
பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.
Cling fast to Him who is free from all desire Seek Him for your freedom, from attachment (p) Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.
ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்
Desire the desire of Almighty who is without desire, in order to renounce desire, desire that desire. (infinite has no need for desire)
குறளானது ஈரடிகளில் ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது. தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு.
பாறைகளில் எழுதி, பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். நூலாக எழுதப்பட்ட ஓலைகள் கட்டித் தொகுக்கப்பட்டன. இவற்றைப் பொத்தகம் என்றும், பொத்தகக் கவளி என்றும் வழங்குவர். ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்படும் வெற்றிலையை வெற்றிலைக் கவளி என்பது போல் பொத்தல் செய்து அடுக்கிக் கோக்கப்படும் எழுத்தோலைகள் பொத்தகக் கவளி எனப்பட்டன.