http://www.asia-oss.net/LanguageObservatory/katturai/avvaivalluvar.htm
நான் யார்?:
நாராயணன் (நாரா) - தமிழ் தாய்மொழி.
நாரா - கணினி பெயர்
திருச்சியில் பிறந்து, சென்னை ஐஐடி இல் பொறியியல் படித்து, பெங்களூரில் உள்ள லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றினேன்.
பின்னர் 12 ஆண்டுகள் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலும், அரசு நிறுவனத்திலும், 14 ஆண்டுகள், சிங்கப்பூர் ஜப்பானிய அரசு சார்ந்த நிறுவனத்திலும் ஆலோசகர், பயிற்சியாளர், ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினேன்.
தற்போது நியூசிலாந்தில் (வென்மேக தேசத்தில்) வசிக்கிறேன். கடந்த 12 ஆண்டுகள் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக பகுதி நேர வேலை. மற்ற நேரங்களில் தமிழ் இலக்கியம், தொன்மையான நூல்களை கற்கும் மாணவன் ; கணிதம் & வானியல்; இயற்பியல்; தத்துவம்; வரலாறு மற்றும் கலாச்சாரம் மற்றும் பல.
முகவுரை: உள்ளடக்கங்கள் அல்லது தலைப்புகள்
பிரிவுகள்
1) முகவுரை
2) கடவுள் வாழ்த்து
3) திருக்குறள் - திருவள்ளுவர்
4) ஓளவை யார்? (மிக வயதான தாய்)
5) திருக்குறள் - காலம், ஓலைச் சுவடி, பிரதி, பொது நெறி, அமைப்பு
6) ஒளவையார் கடவுள் வாழ்த்து - No free lunch
7) சில தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்கள் 14 (1%) - திறந்த மனம், வாழ்நாள் கற்றல், நட்பு, பேச்சு, செயல் - வினை, உண்மை, அமைப்பு - அரசியல், பொருளாதாரம், சமுதாயம்
8) ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன்
9) முடிவுரை
பிரபலமான தலைப்பு -
ஆயிரக்கணக்கான பேச்சாளர்கள்
மற்றவர்கள் சொன்னதை நானும் சொல்கிறேன்
திரும்பச் சொல்ல வாய்ப்பு உண்டு - வேறு வழி இல்லை
சகித்துக் கொள்ளுங்கள்
பொறுத்துக் கொள்ளவும்
'பொறுத்தார் பூமி ஆழ்வார்'' என்கிற நன்மொழி தெரிந்த ஒன்றே.
1k) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை
பொறையுடைமை- திறன் 151
தோண்டிய மனிதனைத் தாங்கி நிற்கும் பூமியைப் போலவே, தவறாகப் பேசுபவர்களைத் தாங்குவதும் உயர்ந்த பண்பு.
# கடவுள் வாழ்த்து
கடவுள் - (கட)ந்து நிற்கும் எல்லாவற்றிலும் (உள்) ள மறைபொருள்.
அதுயின்றி எதுவுமில்லை - அதுகடந்து எதுவுமில்லை
அது எங்கும்உள்ளது - எல்லாம்அதில் உள்ளது
அப்பொருளானது உருவமற்றதாக, அன்பு கொண்டதாக, அறிவுமிக்கதாக, நிலையானதாக அநாதியாக உள்ளது.
2k) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி | பகவன் முதற்றே உலகு. 1-
'அ' எழுத்துகளை வழிநடத்துகிறது; கடவுள் உலகம் முழுவதையும் வழிநடத்தி செல்லும் பரம்பொருள் (ஆண்டவர்)
3k) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் | நற்றாள் தொழாஅர் எனின். 2-
அனைத்தையும் அறிந்த கடவுளை வழிபடாத (பாதங்களில் விழாத - சரணாகதி) எல்லா ஞானமும் (படிப்பு ஆய்வுகள்) வீண்
Avvai Equivalent அவ்வையின் இதே கவிதை:
ஆதியாய் நின்ற அறிவும் முதலெழுத்து
ஓதிய நூலின் பயன்
- ஔவை முதல் குறள்
ஆதியாய் நின்ற ஒன்று அறிவு அறிவாகும். நமக்கு முதலெழுத்தாக உள்ளதும் அதுதான். நூல் ஓதியதன் பயனும் அதுதான்.
திருக்குறளின் முதல் இரண்டு பாடல்களில் உள்ள கருத்துக்களின் உள்ளடக்கப் பாடல் இது.
Shrodinger's cat - dead and alive
Known - unknown
ஒன்றும் தெரியாது - ஆனாலும் தெரியும்
#திருக்குறள் - திருவள்ளுவர்
குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும்
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள் -
அணு - smallest known particle, so not atom now quark
"திருக்குறள்" என்றும் இது பெயர் ...
திருவள்ளுவர் - திருக்குறளை இயற்றிய புலவர்
வள்ளுவர் என்ற பெயர் எப்படி வந்தது
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை
திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
அவை:
தேவர்
நாயனார்
தெய்வப்புலவர்
செந்நாப்போதர்
பெருநாவலர்
பொய்யில் புலவர்
பொய்யாமொழிப் புலவர்
மாதானுபங்கி
முதற்பாவலர்
பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம். இவரை,
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என பாரதியாரும்,
"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே"
என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
திருவள்ளுவரின் காலம்:
கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்ததாகத் தெரிகிறது.
மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர்.
மௌரியர்கள், தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க காலப் புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். இவை, அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது.
மேலும், மாமூலனார், மௌரியர்களுக்கு முன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார்.
*மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது.
திருவள்ளுவரின் கால மதிப்பீடுகள் பரவலாக வேறுபடுகின்றன
தமிழக அரசு கிமு 31ஆம் ஆண்டை வள்ளுவரின் ஆண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
அவ்வை யார்? அவ்வையார்
எழுவர்?
ஆதி - பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மணம் முடிக்கும் போது தமக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதாவது அவர்கள் ஊர் ஊராகச் சென்று ஆலய தரிசனம் செய்வ தென்றும், தாம் செல்லும் வழியில் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவ்வூரிலேயே விட்டுச் செல்வதாகவும் சபதம் எடுத்துக் கொண்டனர். பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.
அவ்வை; உப்பை; அதிகமான் (ஆண்); உறுவை; கபிலர் (ஆண்); வள்ளியம்மை; திருவள்ளுவர் (ஆண்)
“மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.
“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? –
முட்டமுட்டப் பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ”
என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான்?. நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.
Similar to Tolstoy story
டால்ஸ்டாயின் கதையைப் போன்றது
இயக்குவது அது இயங்குவது நீ
இந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது.
பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்களை எதிரொலிக்கிறது.
Other poems
(2) உப்பை என்னும் பெண் குழந்தை பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியது:
“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்
சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே
கற்பித்தான் போனானோ? காக்கக் கடனிலையோ?
அற்பனோ அன்னாய் அரன்?”
3) மூன்றாவது குழந்தை அதிகமான் பாடியது:
அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.
கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்
விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்
ஊடி வளர்க்கானோ? ஓகெடுவாய் அன்னாய்! கேள்
வாட்டமுனக்கேன்? மகிழ்!
4) நான்காவது குழந்தை உறுவை, தாயின் உணவையே உண்டு வளரவில்லையா? இதுவும் இறைவனின் செயலில்லையா? நீ ஏன் கவலைப்படுகிறாய்? .
சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்
அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம் – மண்டி
அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை
நிலைகண்டு நீயறிந்து நில்.
5) ஐந்தவது பிள்ளை கபிலர் பாடிய வெண்பா: நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா? இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?
கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்
உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்
நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்
தமக்குத் தொழிலென்னதான்?
6) ஆறாவது குழந்தை வள்ளியம்மை இயற்றியது: தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா
அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்
இன்னும் வளர்க்கானோ? என் தாயே! – மின்னரவஞ் சூடும்
பெருமான், சுடுகாட்டில் நின்று விளையாடும் பெருமான் அவன்”
இதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்
7) ஏழாவது குழந்தை வள்ளுவன் பாடிய வெண்பா: உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா? எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.
எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ?
அவ்வுயிரில் யானொருவன் அல்லனோ? – வவ்வி
அருகுவது கொண்டிங் கலைவதேன்? அன்னே
வருகுவதுதானே வரும்?
வள்ளுவன் தன்னை, ஒரு உயிர், சாமானியன் மனிதன்
புத்தரின் நீ யார் என்றதற்கு பதில்: நான் விழித்திருக்கும் மனிதன்
Saivam Summarised anbe sivam
1) உள்ளிலிருந்து ஆட்டுவது சிவம்
உணராது ஆடுவது சவம்
சவத்தை விட்டது சிவம்
கதையை முடித்தது சிவம்
கணியன் பூங்குன்றன் - 192
நீர்வழிப் படுஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படுஉம்' என்பது திறவோர்*
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,
பேரியாற்று நீரிலே செல்லும் மிதவைபோல் எம் அரிய உயிரானது முறையாகச் சென்று கரைசேரும்
அறத்துப்பால் - அதிகாரம்: ஊழ் குறள் 372:
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
முட்டாளாக மற்றும் இழிவான உழ்வினை அறிவை அகற்றிவிடும், ஆக்கம் தரும் உழ்வினையோ அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும்.
அறம்:
Ex: Law of Thermodynamics - Observed beyond proof
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,
Observed - very clear
#அவ்வையார் ஓளவையார் (மிக வயதான தாய்)
ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது.
அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண்
ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது.
வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள்
ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர்.
அற்புதம் படைத்தார் கவிதீட்டி
ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர்.
தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.
ஔவையார் - 5 பேர்
1 சங்க காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன், அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர்
2 இடைக்காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் - மூவேந்தர், அங்கவை சங்கவை மணம்
3 சோழர் காலம் 12-ஆம் நூற்றாண்டு - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை,
4 சித்தர், சமயப் புலவர் 14-ஆம் நூற்றாண்டு - ஔவை குறள், விநாயகர் அகவல்
5 16-18-ஆம் நூற்றாண்டு - தமிழறியும் பெருமான் கதை, பந்தன் அந்தாதி
பண்டைய தமிழின் மிகச் சிறந்த பெண் கவிஞர்களில் ஒருவர். அவ்வையார், கவிதாயினி, துறவி, சித்தர், கதை சொல்பவர், சமூக சீர்திருத்தவாதி எனப் பலர் இருக்கலாம்.
*வள்ளுவர் ஔவையார் போன்ற புலவர்களின் காலம், இனம், சமயம் பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அவர் படைப்புகள் முதல்தரமானவை.
காலம், இனம், சமயம் போன்றவை அவ்வளவு முக்கியமில்லை.
#திருக்குறள் - ஓலைச் சுவடி, பிரதி, பொது நெறி, அமைப்பு
ஆனால் பல அறிஞர்கள் பனை ஓலைச் சுவடிகளைச் சேகரித்து அவற்றைப் பாதுகாப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டனர்.
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், ஓரியண்டல் கையெழுத்துப் பிரதிகள் நூலகம் மற்றும் சென்னையில் உள்ள அடையார் நூலகம், தியோசாபிகல் சொசைட்டி நூலகம் அடையாறு, டாக்டர் உ.வி. சுவாமிநாத ஐயர் நூலகம், தஞ்சாவூர் சரபோஜி நூலகம்
2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திருக்குறளின் பனை ஓலைக் கையெழுத்துப் பிரதி காட்சிப்படுத்தப்பட்டது.
திருக்குறள் முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.?
முதலில் தஞ்சை ஞானப்பிரகாசரால் வெளியிடப்பட்டது.
1850ஆம் ஆண்டு சென்னையில் கந்தப்பனின் வீட்டில் இருந்து ஒரு பிரதி கிடைத்தது
1850 வேதகிரி முதலியார் முதன் முதலில் திருக்குறளை அச்சிட்டார்
மகாலிங்க அய்யர் சில ஆண்டுகளுக்கு முன், 24 அத்தியாயங்கள் மட்டுமே அச்சிட்டுள்ளார்.
திருக்குறளின் முந்தைய பெயர் "முப்பால்"?
திருக்குறள் மொத்தம் 133 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது - 1330 இரட்டை வரிகள்.
*திருக்குறளில் பயன்படுத்தப்படாத தமிழ் உயிரெழுத்து Ou (ஔ) மட்டுமே.
*ஔ - பிரச்சனை உயிரெழுத்து
இது இல்லாமல் 228 எழுத்துக்கள் இருக்கும்
*பயன்படுத்தப்படாத சொற்கள் “தமிழும் கடவுளும்”
முதல் விளக்க உரைநடை மணக்குடவர் என்பவரால் எழுதப்பட்டது.
திருக்குறள் முதலில் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
திருக்குறளின் 10வது விளக்க உரைநடை பரிமேலழகரால் எழுதப்பட்டது.
சமயம் கடந்த பொது நெறி
வள்ளுவம் ஒரு சமய நூலன்று
பொதுநெறி
மனித வாழ்வில் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு கருப் பொருட்கள் உள்ளன .
வாழ்க்கையில் குறிக்கோள்
அறவழியில் நடந்து பொருளீட்டி முறையாக இன்பம் பெறு
வீடு - இறைவனின் இருப்பிடம். மதம் அல்லது நம்பிக்கை தொடர்பானது. தவிர்ப்பது நன்று
திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை.
அ என்றால் அகரம் .ஆகவே நான் முதலெழுத்தாக அகர முதல எழுத்தெல்லாம் என்றும் பகவானையும் உலகையும் இணைத்து ஆதி பகவன் முதற்றே உலகு
Structure அமைப்பு
அத்தியாயங்கள் 1–4: அறிமுகம் - கடவுள் இயற்கை வழிபாடு
அத்தியாயங்கள் 5–24: இல்லற அறம்
அத்தியாயங்கள் 25-38: துறவி அறம்
அத்தியாயங்கள் 39-63: அதிகாரவர்க்கம், அரசியல், தலைவரின் குணங்கள்
அத்தியாயங்கள் 64-73: பொருளாதாரம், மற்றும் ஆட்சியாளர், வணிக தொழில்
அத்தியாயங்கள் 74-96: மாநிலத்தின் முக்கிய பகுதிகள், பொது வாழ்க்கையில் சாதுரியம்
அத்தியாயங்கள் 97–108: சமூக வாழ்வில் முழுமையை அடைதல்
அத்தியாயங்கள் 109–115: திருமணத்திற்கு முன் (மறைக்கப்பட்ட) காதல்
அத்தியாயங்கள் 116–133: திருமணமான காதல்
திருக்குறளில் கூறப்படாத கூறுகள் எதுவும் இல்லை
வணங்குவது,வாழ்த்துவது, வாழ்வது, பேசுவது, உண்பது, உழைப்பது, காதல் கொள்வது, உண்மை பகர்வது, உழவு செய்வது, வான்மழை பெய்வது, வாழ்க்கை நலம், அரசு திட்டமிடல் என
#No free lunch - ஒளவையார் நல்வழி கடவுள் வாழ்த்து
இலவச உணவு இல்லை
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா (இயல் இசை நாடகம்)
ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும்|
வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர் |
ஏவாமல் உண்பதே ஊண்' - [ஔவையார்]
ஒருவரின் கண்ணோட்டம் ஒருமை அல்லது ஒன்றோடொன்று இணைந்த பிரபஞ்சத்தைப் பார்ப்பதாக இருக்க வேண்டும் (பிரிவினைக்கு பதிலாக).
ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்துபவரே உண்மையான துணிச்சலானவர்.
கல்வி என்பது தவறுகள் இல்லாமல் அல்லது முழுமையுடன் கற்பது.
பெருமையுடன் வாழ்வது அல்லது உணவு என்பது நேர்மையான வேலையுடனும் கண்ணியத்துடனும் பெறப்பட வேண்டும், அடிமைக்கு எறியப்பட்ட பொருள் அல்ல.
பிரபஞ்சம் பெரிய வலை அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன
எல்லாம் இணைந்த அது ஒன்றே
சேர்த்துப் பார்ப்பது அறிவு
சேர்த்ததை பிரிப்பது மடமை
Unity in all
எல்லாம் இணைந்த அது ஒன்றே
அதுவே நம் காணும் இயற்கை
அதுஒன்றே எங்கும் உள்ளது
இதை உணர்ந்தால் சமாதானம் சாந்தம்
ex: corona virus, calamity, air pollution
இரு கண்களையும் ஒன்றாக்கினால் இன்ப துன்பம் – இரவுபகல் என்பதே இல்லை
நாணயத்திற்கு இரு பக்கங்கள்
எல்லா விவாதங்களுக்கும் இரு பக்கங்கள்
உண்மை இரு பக்கங்களுக்கு நடுவில் உள்ளது
புண்ணியமாம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல் 1
கடந்த கால செயல்கள் இந்த வாழ்க்கையில் சேமிப்பாக இருப்பதால் நல்லதைச் செய்யுங்கள் மற்றும் கெட்டதை நீக்குங்கள் - தெளிவாகச் சிந்தித்து, எல்லா மதங்களும் இதைப் போதிக்கின்றன: தீங்கு செய்யாமல் நல்லது செய்யுங்கள்.
195. நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீங்கு செய்யாதே!: நரிவெரூஉத் தலையார்
பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
நீங்கள் உயிரோடும் வலிமையோடும் இருக்கும்போது நல்லது கெட்டது பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், மரணம் வரும்போது துன்பத்தைப் புரிந்துகொண்டு (தாமதமாகும்போது) கெட்ட செயல்களுக்காக வருந்துவார். நன்மை செய்ய முடியாவிட்டாலும், தீமை செய்யாதீர்! அதுவே எல்லாரையும் மகிழ்ச்சியாகவும், உலகை வாழ சிறந்த இடமாகவும் மாற்ற ஒரே வழி.
[நடைமுறை பக்கம்: கெட்ட செயல்களை முடிந்தவரை குறைக்கவும்]
சில தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்கள்
#1 Open Mind திறந்த மனம் வெளிப்படைத்தன்மை
4k) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், (கேட்டவாறே கொள்ளாமல்) அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
*மந்திரம் தந்திரம் லௌகிகம்
(விஜ்)ஞானம் தர்மம் ப்ரஹ்மஸ்வருபம்
ஸுன்யப் பிரச்னம் போதிஸத்த்வம் - சாலிவாஹன்
வேத துதி / சடங்குகள் / நுட்பங்கள் உலக விஷயங்களுக்கானவை.
அறிவு/உண்மை/அறம் கடவுளின் வடிவங்கள் அல்லது பார்வைகள்.
திறந்த மனதுடன் அல்லது வெறுமையான மனதுடன் கேள்வி கேட்பதன் மூலம் மட்டுமே ஒருவர் ஞானம் பெற முடியும்.
உண்மையை அறிய மனதை திறந்து வைத்து ஆராய்ச்சி செய்யுங்கள்
மூடிய மனதில் ஒன்றும் போட முடியாது
கண்ணை மூடிக்கொண்டு எதையும் எதையும் காண முடியாது
#Life long learning வாழ்நாள் கற்றல்
5k) தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு 396
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
#நட்பு friendship
6k) உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு . 788
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
automatic response with out thinking
அதியமான்-அவ்வையார் நட்பு
ஒளவையின் மூதுரை வரிகள்
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.
அது ஓர் அழகிய குளம், அதில் நீரருந்த நிறைய பறவைகள் அங்கே நிறைந்திருக்கின்றன. அக்குளத்தில் அழகிய தாமரைச்செடிகளும், அல்லிச்செடிகளும் மலர்கள் பூத்து நிறைந்திருக்கின்றன. மழைக்காலம் தீர்ந்து, கோடை வெயிலில் அக்குளம் வற்றிப்போகிறது, அதுவரை அக்குளத்தை நாடி நலம்பெற்ற பறவைகள் இதற்கு மேலும் அக்குளத்தால் தமக்கு நன்மைகள் ஏதுமில்லை என்பதை உணர்ந்து கொஞ்சமும் நன்றியின்றி அங்கிருந்து பிரிந்து சென்றுவிடுகின்றன. ஆனால் தாமரையும், அல்லியும் அக்குளத்திலேயே தமது இறுதிக்காலம் வரை பிரியாது உடனிருக்கின்றன. இந்த அழகான உவமையைக் கூறி உண்மை நட்புக்கும் சுயநலம் மிகுந்த போலி நட்புக்குமான வித்தியாசத்தை அழகுற விளக்குகிறார் ஒளவை. உண்மையான நண்பர்கள் எந்த சமயத்திலும் நம்மை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார்கள், சொந்த தேவைகளுக்காக சுயநலமாக நம்மை விட்டு பிரிந்து செல்பவர்கள் உண்மை நண்பர்களாகவும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நன்று.
#Speech பேச்சு
7k) சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க | சொல்லிற் பயனிலாச் சொல். 200-
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்;
பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.
8k) கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் | வேட்ப மொழிவதாம் சொல். 643-
சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன்,
கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
9k) தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129
நாவினாற் சுட்ட வடு. மு. வரதராசன் உரை : தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. சாலமன் பாப்பையா உரை : ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும்.
#Action - Reaction செயல் - வினை
newtons Law செயல் - முடிவு
10k) பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
கொன்றை வேந்தன் 74
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும்.
#Truth உண்மை
11k) வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல் 291
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
#Organization - Political அமைப்பு - அரசியல்
12k) இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் 448
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியோரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
13k) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். 475
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.
over loading, அதிக ஏற்றுதல்
too much work for one person, ஒரு நபருக்கு அதிக வேலை
weakest link made weaker, பலவீனமான இணைப்பு
#Economics - பொருளாதாரம்
14k) ஆகு ஆறு/ அளவு இட்டிது ஆயினும் கேடுஇல்லை/
போகு ஆறு/ அகலாக்கடை (478)
ஆகு ஆறு = Income, போகு ஆறு = Expenditure
வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை.
செலவு வருமானத்தை விட அதிகமாக இல்லாவிட்டால்.
ஒளவையார் கொன்றை வேந்தன்:
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
பொருளைத்தேடாது சேர்த்து வைத்திருந்த பொருளைச் செலவிட்டுக் கொண்டே இருந்தால் இறுதியில் அது வறுமையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
நல்ல செல்வமுடையவன் ஆயினும் வரவு அறிந்து செலவு செய்து உண்ணுதல் வேண்டும்.
#Society சமுதாயம்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி 2
ஜாதிகள் இரண்டு மட்டுமே,
செயல்கள் நடத்தை வாழ்க்கை - அடிப்படையில்
நீதியின் கோட்பாடுகளின்படி பேசுவதற்கு இல்லை - பெரிய புத்தகங்களின்படி, வாழ்க்கையில், பங்களிப்பாளர்கள் உயர்ந்தவர்கள், பங்களிக்காதவர்கள் தாழ்ந்தவர்கள்.
#ஒளவையார் ஆத்திசூடி - Aathisoodi
தமிழ் எழுத்தினைப் படிக்க ஔவையின் ஆத்திச்சூடி
short and sweet - குறுகிய, ஆனால் பெரிய மற்றும் பயனுள்ள
1.அறஞ் செய விரும்பு
நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும்.
2. ஆறுவது சினம்
ஆறுவது- தவிர்க்க வேண்டியது, சினம் - கோபம்.
3. இயல்வது கரவேல்
இயல்வது - நம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு
கரவேல் - வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)
4. ஈவது விலக்கேல்
ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை
விலக்கேல் - நீ தடுக்காதே
5. உடையது விளம்பேல்
உடையது - உனக்கு உள்ள பொருளை அல்லது இரகசியங்களை
விளம்பேல் - நீ பிறர் அறியும்படி சொல்லாதே
6. ஊக்கமது கைவிடேல்
உற்சாகத்தை (தன்னம்பிக்கை/ விடாமுயற்சி) இழக்காதே
7. எண் எழுத்து இகழேல்
எண் – கணித நூலையும்
எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்
இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
8. ஏற்பது இகழ்ச்சி
ஏற்பது-ஒருவரிடம் சென்று இரப்பது(இல்லை எனக் கேட்பது); பிறரை ஏமாற்றி, வஞ்சனையான வழியில் பொருள் ஈட்டுவது, பிறரை ஏய்த்துப் பிழைப்பது ; இவை பிச்சை எடுப்பதிலும் மிகக் கேவலமானது.
9. ஐயம் இட்டு உண்
ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து
உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு
ஒப்புரவு --- உலக நடையை அறிந்து, ஒழுகு --- (அந்த வழியிலே) நட.
உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.
ஒப்புரவு என்பது, இன்னார் இனியார் என்று பாராமல், எல்லோர்க்கும் உதவி புரிந்து வாழ்வது.
11. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
4.கண்டொன்று சொல்லேல்.
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
15.ஙப் போல் வளை.
'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
"ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
16.சனி நீராடு.
சனி(குளிர்ந்த) நீராடு.
17.ஞயம்பட உரை.
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
*18.இடம்பட வீடு எடேல்.
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
*19.இணக்கம் அறிந்து இணங்கு.
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
20.தந்தை தாய்ப் பேண்.
உன் தந்தையையும் தாயையும் அன்புடன் காப்பாற்று.
21.நன்றி மறவேல்.
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22.பருவத்தே பயிர் செய்.
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23.மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
24.இயல்பு அலாதன செய்யேல்.
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
*25.அரவம் ஆட்டேல்.
பாம்புகளை பிடித்து விளையாடாதே. (donot play with danger)
26.இலவம் பஞ்சில் துயில்.
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
27.வஞ்சகம் பேசேல்.
(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
28.அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களை செய்யாதே
*29.இளமையில் கல்.
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
30.அறனை மறவேல்.
கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்
31.அனந்தல் ஆடேல்.
மிகுதியாக தூங்காதே
32. கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
33. காப்பது விரதம்
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
34. கிழமை பட வாழ்
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
35. கீழ்மை யகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு
36. குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
37. கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
38. கெடுப்ப தொழி
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39. கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
40. கைவினை கரவேல்
உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
42. கோதாட் டொழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
43. கௌவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
44. சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
45. சான்றோ ரினத்திரு
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46. சித்திரம் பேசேல்
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
47. சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
49. சூது விரும்பேல்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
51. சேரிடமறிந்து சேர்
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
52. சையெனத் திரியேல்
பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
53. சொற்சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
54. சோம்பித் திரியேல்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
55. தக்கோ னெனத்திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
56. தானமது விரும்பு
யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
57. திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
58. தீவினை யகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
59. துன்பத்திற் கிடங்கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
60. தூக்கி வினைசெய்
ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
61. தெய்வ மிகழேல்
கடவுளை பழிக்காதே.
62. தேசத்தோ டொத்துவாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
63. தையல்சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
64. தொன்மை மறவேல்
பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)
65. தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
66. நன்மை கடைப்பிடி
நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
67. நாடொப் பனசெய்
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
68. நிலையிற் பிரியேல்
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
69. நீர்விளை யாடேல்
வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே
70. நுண்மை நுகரேல்
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
71. நூல்பல கல்
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
72. நெற்பயிர் விளை
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
73. நேர்பட வொழுகு
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
74. நைவினை நணுகேல்
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
75. நொய்ய வுரையேல்
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
76. நோய்க்கிடங் கொடேல்
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
77. பழிப்பன பகரேல்
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
78. பாம்பொடு பழகேல்
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல்
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
80. பீடு பெறநில்
பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
82. பூமி திருத்தியுண்
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
83. பெரியாரைத் துணைக்கொள்
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
84. பேதைமை யகற்று
அறியாமையைப் போக்கு
85. பையலோ டிணங்கேல்
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86. பொருடனைப் போற்றிவாழ்
பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
87. போர்த்தொழில் புரியேல்
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
88. மனந்தடு மாறேல்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
89. மாற்றானுக் கிடங்கொடேல்
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92. முனைமுகத்து நில்லேல்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
93. மூர்க்கரோ டிணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
94. மெல்லினல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
95. மேன்மக்கள் சொற்கேள்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
96. மைவிழியார் மனையகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
97. மொழிவ தறமொழி
[மொழிவது = பேசுவது;சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
98. மோகத்தை முனி
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
99. வல்லமை பேசேல்
உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே
100. வாதுமுற் கூறேல்
முந்திக்கொண்டு வாதிடாதே
101. வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
102. வீடு பெறநில்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
103. உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
104. ஊருடன் கூடிவாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
105. வெட்டெனப் பேசேல்
யாருடனும் கடினமாகப் பேசாதே
106. வேண்டி வினைசெயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
107. வைகறை துயிலெழு
விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு. சூரியன் உதிக்கும் முன்பே
108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே
109. ஓரஞ் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
#ஒளவையார் கொன்றை வேந்தன்
short and sweet - குறுகிய, ஆனால் பெரிய மற்றும் பயனுள்ள
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை | என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார்.
முன் - முன்னே, அறி - காணப்பட்ட,
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது
சாலவும் - மிகவும்
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச் செய்யும் இல்லறமே நல்லறமாகும்
அல்லது - இல்லற மல்லாத துறவறமானது?
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
கொடாதவருடைய, தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், - அபகரிப்பர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
சுருங்குதல் - குறைதல்
மிதமாக உண்பது மாதர்களுக்கு அழகாகும்.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக்கொண்டால் வமிசத்துடன்/அடியுடன் அழிந்துவிடுவான்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத்தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து
கட்டளை யிடுவதற்குமுன் குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் தேவாமிர்தம் போல்வார்.
ஏவுதற்குமுன் குறிப்பறிந்து செய்கிற பிள்ளைகள்தேவாமிர்தம் போல்வார்.
9. ஐயம் புகினும் செய்வன செய்
பிச்சையெடுத்துச் சீவித்தாலும் செய்யத்தக்க காரியங்களைச் செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
(நற்குணமுடைய) ஒருவனை, (துணையாகப்) பற்றிக்கொண்டு, - ஓரிடத்தில் - வாசம் பண்ணு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
வேத மந்திரங்கள் ஓதும் வேதியருக்கு வேதம் ஓதுதலைவிடச் சிறந்தது ஒழுக்கமாகும்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
பொறாமையாகப் பேசுதல் ஒருவருடைய வளர்ச்சியையே அழித்துவிடும்.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
சிக்கனமாக இருந்து தானியத்தையும் செல்வத்தையும் தேட வேண்டும்.
14 கற்பு எனப்படுவது சொல்திறம்பாமை
கற்பு எனப்படுவது யாதெனில் முன்பின் முரண்படாது வாக்குமாறாது நடந்து கொள்ளுதலாகும்.
15.காவல் தானே பாவையர்க்கு அழகு
தன்னை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் காத்துக் கொள்ளுதல் பெண்களுக்கு அழகாகக் கருதப்படும்.
16. கிட்டா தாயின் வெட்டென மற
நமது கிடைக்காது எனத் தெரிந்துவிடட்டால் உடனடியாக அந்த நினைப்பை முற்றிலும் விட்டுவிட வேண்டும்.
17. கீழோர் ஆயினும் தாழ உரை
நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடமும் நயமாகப் பேச வேண்டும்.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
ஒருவர் செய்த குற்றத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தால் சுற்றத்தார் என்று எவருமே இருக்கமாட்டார்கள்.
19. கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்
நீ பெரிய பலசாலியாக இருந்தாலும் பெருமைபடப் பேசித் திரியாதே.
20 கெடுவது செய்யின் விடுவது கருமம்
ஒருவர் நமக்கு கேடு செய்தாலும் அதனை போகட்டும் என்றுஅப்படியே விட்டுவிடுதல் உயர்ந்த செயலாகக் கருதப்படும்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
நமக்கு ஒரு தாழ்வு வந்த போதும் மனம் தளறாது இருப்பதே செல்வம் பெருகுவதற்கான ஒரே வழியாக அமையும்.
22 கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
நம் கையில் இருக்கும் எல்லா செல்வத்தையும்விட உயர்வான உண்மையான செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வியே ஆகும்.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
குடிமக்களின் தேவை அறிந்து அவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு உதவி செய்தல் மன்னனின் கடமையாகும்.
24. கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
கோள்மூட்டி கலகம் விளைவிப்போர் காதில் மறைபொருளைச் சொல்லி மறைக்க நிற்பது காற்றுடன் கூடி எரியும் நெருப்பு போன்றது.
25. கௌவை சொல்லின் எவ்வெவர்க்கும் பகை
எவரையும் பழித்துப் பேசிக் கொண்டே இருப்பவன் அனைவருக்கும் பகையாளி ஆவான்.
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
குழந்தைகள் பெற்று வாழ்தலே குடும்பத்திற்கு அழகு.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுதலைக் கேட்பதே பெற்றோர்க்கு இன்பம் தருவதாகும்.
28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
தவத்திற்கு அழகு எனப்படுவது எந்த நேரமும் இறைவன் நினைவோடு இருத்தலாகும்.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
புகழ்பட வாழ வேண்டும் என்று விரும்பினால் பயிர் தொழிலை விரும்பி செய்.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
குடும்பத்தினர்அனைவரும் கூடி வாழ்தலே சுற்றத்திற்கு அழகு சேர்க்கும்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
வஞ்சனையும் தேவையில்லா விவாதமும் துன்பத்தை மட்டுமே கொண்டு சேர்க்கும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
நாம் செய்கின்ற தவங்களை விட்டுவிட்டால் அறியாமை வந்து நம்மை ஆண்டுவிடும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
இரவுகாவலாளியாக இருந்தாலும் நள்ளிரவில் தூங்க வேண்டும்.
34. சைஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
பிறருக்கு கொடுக்குப்படியாக உணவு இருக்குமானால் இரந்து வருவோருக்கு உணவிட்ட பின்னரே உண்ணல் வேண்டும்.
35.. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
பொருளுள்ளவர் என்று கூறப்படுபவர் அதனால் வரும் அறம், இன்பம் , வீடுபேறு ஆகியவற்றையும் அடைவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
சோம்பேறியாய் இருப்பவர் வறுமையில் வாடி அலைவர்.
37.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை சொல்லைவிட உயர்வானதொரு மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தாயைவிட சிறந்த தெய்வம் வேறு இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கடல் கடந்து அந்நிய நாடு சென்றாவது பொருளைத் தேட வேண்டும்.
40 தீராக் கோபம் போராய் முடியும்
கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அது பெரும்சண்டையில் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
கணவனுக்கு ஒரு துன்பம் வந்தபோது துடித்துப் போகாமல் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி மடியில் நெருப்பை வைத்துக் கொண்டு வாழ்தலுக்கு ஒப்பாவாள்.
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்
எப்போதும் அவதூறு பேசும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்கள் ஆவர்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
தெய்வம் கோபம் கொண்டால் தவத்தோரும் தப்ப இயலாது.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
பொருளைத்தேடாது சேர்த்து வைத்திருந்த பொருளைச் செலவிட்டுக் கொண்டே இருந்தால் இறுதியில் அது வறுமையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
தை மாதமும் மாசி மாதமும் வெயில் அதிகம் இருப்பதால் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்குதல் நன்று.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
பிறரிடம் வணங்கி பெறும் பொருளில் வாழ்வதைவிட பயிர் செய்து கிடைக்கும் தானியத்தில் உண்டு வாழ்தல் இனிது.
47. தோழனோடும் ஏழமை பேசேல் நெருங்கிய நண்பனிடம்கூட
ஒருபோதும் தன் வறுமையைப் பற்றிப்n பேசக் கூடாது.
48. நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்
தீயவரோடு கொள்ளும் நட்பு துன்பத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
நாடு செழித்திருக்குமானால் நாட்டில் தீமையான செயல்கள் எதுவும் நடைபெறாது.
50 நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை
கல்விக்கு அழகாகக் கருதப்படுவது சொன்னசொல் பிறழாதிருத்தல் ஆகும்.
51 நீரகம் பொருந்திய ஊரகத்திரு
நல்ல நீர்நிலைகள் உள்ள இடத்தில் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்தல் வேண்டும்.
52.. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
சிறிய செயலாகவே இருந்தாலும் நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
53.. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
நல்ல ஒழுக்க நூல்களைப் பயின்று அதன்படி நடக்க வேண்டும்.
54.. நெஞ்சை ஒழித்தொரு வஞ்சகம் இல்லை
நமக்குத் தெரியாமல் ஒருபோதும் வஞ்சகமான காரியங்களில் ஈடுபட முடியாது.
55. நேரா நோன்பு சீராகாது
மனம் விரும்பி செய்யாத எந்த விரதமும் நன்மை பயக்காது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
எளியார் ஆயினும் அவர் மனம் வருந்தும்படி பேசாதே.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவார்
ஏழைகளுக்கு இரக்கம் செய்தால் அவர் உயர்ந்தவராகக் கொண்டாடப்படுவார்.
58. நோன்பென் பதுவே கொன்று தின்னாமை
விரதம் இருத்தல் என்பது பிற உயிர்களைக் கொன்று உண்ணாதிருத்தல் ஆகும்.
59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்
ஒருவர் செய்த பாவ புண்ணியம் அவர் பயிரிட்டு அறுவடை செய்யும் விளைச்சலில் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
அறுசுவை உணவே ஆயினும் உண்ணும் காலம் அறிந்து உண்ண வேண்டும்.
61பிறன்மனை புகாமை அறன் எனத் தகும்
அடுத்தவன் மனைவிமீது ஆசை கொள்ளாதிருத்தலே சிறந்த அறமாகக் கருதப்படும்.
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தை நல்ல பலசாலியாக திகழும்.
63புலையும் கொலையும் களவும் தவிர்
புலால் உண்ணுதல்,கொலை செய்தல், திருடுதல் போன்ற தீய செயல்களில் ஒருபோதும் ஈடுபடாதே.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
கொடியவர்களிடம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது.
65 பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
ஞானம் பெற்றவரிடம் சுற்றத்தார் என்ற பந்தமும் இல்லை. சினம் என்ற தீய குணமும் இருப்பதில்லை.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
அறியாதவர் போல் இருந்து கொள்வது பெண்களுக்கு அணிகலனாகக் கருதப்படும்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
நிதானமாக செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
தீமை என்று சொல்லப்படும் அனைத்துச் செயல்களையும் அண்ட விடாதே.
69. போனகம் என்பது தான்உழந்து உண்டல்
தனது உழைப்பில் உண்ணும் உணவே உணவு எனப்படும்.
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
அமிர்தமே ஆயினும் விருந்தினருக்கு அளித்து உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை
மழை பெய்யவில்லை என்றால் எந்தவொரு நல்ல செயலும் நடைபெறாது.
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
மழை வருவதற்கு முன்னர் மின்னல் வரும்.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
மாலுமி இல்லா கப்பல் ஓட முடியாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முன்னர் நாம் செய்த நன்மை தீமைகள் பின்னர் நம்மிடமே திரும்பி வந்து சேரும்.
75 மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
பெரியோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் போன்றது.
76 மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மெத்தையில் படுத்தல் சுகமான நித்திரையைத் தரும்.
77. மேழிச் செல்வம் கோழை படாது
கலப்பையால் உழுது வியர்வை சிந்தி உழைத்த செல்வம் ஒருபோதும் வீணாய்ப் போகாது.
78. மை விழியார் தம்மனை அகன்று ஒழுகு
விலை மகளிர் இல்லங்களில் இருந்து ஒதுங்கி வாழ்தல் நன்று.
79.மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
பெரியோர் சொல்லும் அறிவுரையைக் கேட்க மறுத்து தன்னிச்சையாக செய்யும் காரியங்கள் கேடாய் முடியும்.
80. மோனம் என்பது ஞான வரம்பு
மௌனமே மெஞ்ஞானத்தின் எல்லையாகும்.
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
நல்ல செல்வமுடையவன் ஆயினும் வரவு அறிந்து செலவு செய்து உண்ணுதல் வேண்டும்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
மழை குறைந்துவிட்டால் உலகில் நடைபெறும் தான தர்மங்கள் எல்லாம் நடைபெறாமல் குறைந்துவிடும்.
83. விருந்து இலோர்க் கில்லை பொருந்திய ஒழுக்கம்
விருந்தினரை வரவேற்று உபசரியாத வீட்டில் நல்லொழுக்கம் இருக்காது.
84 வீரன் கேண்மை கூர் அம்பாகும்
வீரனோடு கொண்டிருக்கும் நட்பானது கையில் கூர்மையான அம்பு வைத்திருத்தலுக்கு ஒப்பானது.
85 உரவோர் என்கை இரவாது இருத்தல்
வலிமை உடையவர் என்போர் ஒருபோதும் பிறரிடம் யாசித்தல் கூடாது.
86 ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
உள்ளத்தில் ஊக்கம் இருந்தால் செல்வத்தை ஆக்குவதற்கான வழி கிடைக்கும்.
87 வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
தூய சிந்தை உள்ளவர் மனதில் ஒருபோதும் கள்ளம் கபடம் இராது.
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை
மன்னன் கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தால் துணையாக நின்று காப்பாற்ற எவராலும் கூடாது.
89 வைகல்தோறும் தெய்வம் தொழு
அதிகாலை எழுந்ததும் தெய்வம் தொழுதல் நன்று.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
சீரான இடத்தில் நித்திரை கொள்ளுதல் வேண்டும்.
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
கல்லாதவரிடம் ஒழுக்க உணர்வு இருக்கும்
என்று எதிர்பார்க்க முடியாது.
#முடிவுரை Conclusion
கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு
வெண்பற்றுள்ள கலை மடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம் புலவீர்!
எறும்பும் தன்கையால் எண்காண்!
-ஒளவையார் தனிப்பாடல்
கலைமகளே தான் கற்றது கைமண்ணளவே என்றும் இன்னும் கற்க வேண்டியது உலகளவு உள்ளது என்று கையைக் கட்டிக் கொண்டு இருக்கிறாள். இவ்வாறு இருக்க நாமோ சிறிதளவு கல்வியைக் கற்றுவிட்டு இறுமாப்பு கொண்டு அலைவது பேதமை
கலைமகளே புத்தகம் வைத்திருக்கிறாள்
அவள் படிப்பதற்கு படித்துக்கொண்டே இருக்கிறாள் - முடிவில்லை
நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பந்தயம் கட்ட வேண்டாம், புலவர்களே
சின்ன எறும்பு கூட தன்னுடைய கையால் எட்டு சாண் அளவு உயரம் இருக்கும்
Humans are not great. Live in harmony with all beings
* இந்தக் கருத்துக்களை பலர் சொல்லியுள்ளார்கள்
அதே கருத்துக்களை நானும் சொல்லிவிட்டேன்
வாழ்க தமிழ்!
வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்!!
...
Website maintained by: NARA